ஒரு திரைப்படத்திற்கு இசை என்பது முகவும் முக்கியம். பாடல்கள் மற்றும் பின்னணி இசை என்பது ஒரு திரைப்படத்திற்கு பெரிய பலம் சேர்க்கும். எனவேதான், அந்த காலத்தில் இருந்து இப்போது வரைக்கும் திரைப்படங்களில் தொடர்ந்து பாடல்கள் இடம் பெற்று வருகிறது. இசை என்பது எப்போதும் ரசிகர்களை மகிழ்விக்கும் ஒன்றாகவே இருக்கிறது.
அதுவும் எம்.ஜி.ஆர் சிவாஜி காலத்தில் பாடல்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. பாடல்கள் மூலதான் காதல், சோகம், வருத்தம், தத்துவம், நம்பிக்கை, தோல்வி என அனைத்து உணர்வுகளையும் இயக்குனர்கள் ரசிகர்களுக்கு கடத்தினார்கள். இன்னும் சொல்லப்போனால் பாடல்கள் மூலம்தான் எம்.ஜி.ஆர் முதலமைச்சராகவே மாறினார்.
சில சமயம் இசையமைப்பாளர் போடும் மெட்டுகளை எதை தேர்ந்தெடுப்பது என்கிற குழப்பம் வரும். அப்போது சில சுவாரஸ்யமான சம்பவங்கள் நடக்கும். சிவாஜி நடித்த திரைப்படம் ‘தங்கை’. இந்த படத்தின் பாடல்களுக்கு இசையமைக்கும் வேலை நடந்து கொண்டிருந்தது. எம்.எஸ்.விஸ்வநாதன் ஒரு பாடலுக்கு நான்கு மெட்டுக்களை போட்டு காட்டினார். அதில் தயாரிப்பாளர் பாலாஜிக்கு ஒரு மெட்டு பிடித்திருந்தது. அப்படத்தின் இயக்குனர் திருலோகச்சந்தருக்கு ஒரு மெட்டு பிடித்திருந்தது. அதேபோல், எம்.எஸ்.வி மற்றும் கண்ணதாசன் ஆகியோருக்கு ஒவ்வொரு மெட்டு பிடித்திருந்தது.
நான்கு பேருக்கும் வெவ்வேறு மெட்டு பிடித்திருந்ததால் எதை தேர்ந்தெடுப்பது என்பதில் குழப்பமும், அவர்களுக்கிடையே வாக்குவாதமும் ஏற்பட்டது. அப்போது அங்கு ஒரு தபாலை கொடுக்க தபால்காரர் வந்தார். உடனே கண்ணதாசனுக்கு ஒரு யோசனை தோன்றியது. ‘அந்த தபால்காரரிடம் 4 டியூன்களையும் வாசித்து காட்டுவோம்.. அவருக்கு எது பிடித்திருக்கிறதோ அதை தேர்வு செய்வோம்’ என கூறினாராம்.
அதன்பின் படி 4 மெட்டுக்களையும் எம்.எஸ்.வி வாசித்துக்காட்ட அந்த போஸ்ட்மேன் ஒரு மெட்டை தேர்ந்தெடுத்தார். அதுதான் திருலோகசந்தருக்கும் பிடித்த மெட்டு. அதன்பின் அந்த மெட்டு பாடலாக மாறியது. அந்த பாடல்தான் ‘கேட்டவரெல்லாம் பாடலாம். என் பாட்டுக்கு தாளம் போடலாம்’ என்கிற பாடல். துள்ளலான இசை கொண்ட இந்த பாட்டு ரசிகர்களை கவர்ந்தது. தங்கை திரைப்படம் 1967ம் ஆண்டு வெளிவந்தது.
இப்படி ஒரு குழுவாகத்தான் அந்த காலத்தில் பாடலை தேர்ந்தெடுத்தனர். அதனால்தான் அந்த பாடல்கள் காலத்தை தாண்டி நிற்பது குறிப்பிடத்தக்கது.
பிக்பாஸ் தமிழ்…
ஏ ஆர்…
தமிழ் சினிமாவில்…
டோலிவுட்டின் இளம்…
இயக்குனர் லோகேஷ்…