வாடிவாசல் படத்துக்கு வந்த சிக்கல்? வெற்றிமாறனுக்கு கட்டையை போடும் ஜூனியர் என்டிஆர்!
வெற்றிமாறன் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த “விடுதலை” முதல் பாகம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றிருந்தது. இதில் சூரி கதாநாயகனாக நடித்திருந்தார். இவரின் நடிப்பு மிகவும் சிறப்பாக இருந்ததாக பல ரசிகர்கள் பாராட்டி வந்தனர்.
“விடுதலை” முதல் பாகத்தை தொடர்ந்து “விடுதலை” திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை வெற்றிமாறன் தற்போது உருவாக்கி வருகிறார். இதனிடையே வெற்றிமாறன் ஏற்கனவே சூர்யாவை வைத்து “வாடிவாசல்” திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிப்பு வெளிவந்தது. “விடுதலை” திரைப்படத்தின் இரண்டாம் பாகம் முடிவடைந்தவுடன் “வாடிவாசல்” படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
குண்டை தூக்கி போட்ட அந்தணன்
இந்த நிலையில் பிரபல மூத்த பத்திரிக்கையாளரான அந்தணன், தனது வலைப்பேச்சு வீடியோவில் ஒரு அதிர்ச்சியான தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார்.
அதாவது சில ஆண்டுகளுக்கு முன்பு ஜூனியர் என்டிஆரை வைத்து ஒரு நேரடி தெலுங்கு திரைப்படத்தை இயக்குவதற்காக வெற்றிமாறன் ஒரு தெலுங்கு தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து அட்வான்ஸ் வாங்கியிருந்தாராம். ஆனால் “விடுதலை” திரைப்படத்தின் படப்பிடிப்பு இரண்டு வருடங்களுக்கு மேல் இழுத்ததால் அத்திரைப்படத்தை அவர் இயக்க முடியாமல் போனதாம்.
வாடிவாசலுக்கு சிக்கல்
தற்போது “விடுதலை” இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பை வெற்றிமாறன் நடத்தி வருகிறார். இந்த படப்பிடிப்பு முதலில் 20 நாட்கள்தான் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது 40 நாட்களுக்கு மேல் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறதாம். ஆதலால் இந்த வருடத்திற்குள் “விடுதலை” இரண்டாம் பாகம் வெளிவர வாய்ப்பில்லை என தெரிய வருகிறதாம்.
இந்த நிலையில் தெலுங்கு தயாரிப்பு நிறுவனத்தினர் என்டிஆர் படத்தை விரைவில் முடித்துத் தரும்படி வெற்றிமாறனுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறதாம். இதனால் “விடுதலை” இரண்டாம் பாகத்திற்கு பிறகு வெற்றிமாறன் ஜூனியர் என்டிஆரின் படத்தை இயக்கப்போய்விடுவார் என்று தெரியவருகிறதாம். இவ்வாறு ஒரு தகவலை அந்தணன் பகிர்ந்துகொண்டுள்ளார். இதை வைத்து பார்க்கும்போது “வாடிவாசல்” திரைப்படத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
இதையும் படிங்க: நயன்தாராவுக்கு இது கூட தெரியாதா? பாவம் புருஷன் – மூடி வச்ச ரகசியத்தை உடைத்த ஆர்யா!