Cinema History
இவன் தேற மாட்டான்!. வாய்ப்பு கேட்டு போன சிவாஜியை அசிங்கப்படுத்திய தயாரிப்பாளர்…
நாடகங்களில் நடித்து தன்னை பலவிதமான பயிற்சிக்கும் தயார்படுத்தியவர் நடிகர் திலகம் சிவாஜி. நாடகங்களில் பல விதமான வேடங்களில் நடித்திருக்கிறார். எம்.ஜி.ஆரை போலவே சிறுவயது முதலே நாடகத்தில் நடிக்க துவங்கியவர். பல நாட்கள் வறுமையையும் பார்த்தவர்.
ஏனெனில், சில சமயம் நாடகங்களுக்கு கூட்டம் இருக்காது. அப்போதெல்லாம் வருமானம் இருக்காது. அப்போது சீனியர் நாடக நடிகர்கள் பலரும் அவருக்கு உதவியிருக்கிறார். எம்.ஜி.ஆரே தனக்கு பலமுறை உதவியதாக சிவாஜியே சில பேட்டிகளில் கூறியிருக்கிறார். அப்போதெல்லாம் பலரும் தனியாக நாடக்குழு வைத்திருப்பார்கள்.
இதையும் படிங்க: சிவாஜியை பார்க்க ரயிலில் அலைமோதிய கூட்டம்… அருமையான பாடல் காட்சி படமானதன் சுவாரஸ்ய பின்னணி…!
எம்.ஆர்.ஆர் ராதா, விகே ராமசாமி, தங்கவேலு, கலைவாணர் கண்ணதாசன் பலரும் வெவ்வேறு நாடகுழுவை நடத்தி வந்தனர். அந்த நாடக குழுக்களில் பலரும் இருப்பார்கள். அப்படி ஒரு நாடக குழுவில் இருந்தவர்தான் நடிகர் திலகம் சிவாஜி. பின்னாளில் பராசக்தி திரைப்படம் மூலம் சினிமாவில் நுழைந்தார் சிவாஜி.
அதோடு, திரைப்படங்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து நடிப்பிற்கே இலக்கணம் வகுத்த நடிகராகவும் மாறினார். சினிமாவில் இவர் ஏற்காத கதாபாத்திரங்களே இல்லை என சொல்லுமளவுக்கு ஒரு முழு நடிகராக மாறினார். அவருக்கு பின்னால் வந்த பல நடிகர்கள் அவரை காப்பி அடித்தே நடித்தனர்.
ஆனால், அந்த இடத்தை பிடிப்பதற்கு முன்பு சிவாஜி எவ்வளவு கஷ்டப்பட்டார்?. எவ்வளவு அவமானங்களை சந்தித்தார் என்பது பலருக்கும் தெரியாது. சிவாஜி நாடகங்களில் நடித்து கஷ்டப்படும்போது அவருக்கு உறுதுணையாக இருந்தவர் எம்.ஆர்.ராதா. சிறு வயது நடிகர்களை குழந்தை போல் நடத்துவாராம். அவர்களை அமரவைத்து தலையெல்லாம் சீவி விடுவாராம்.
இதையும் படிங்க: வார்னிங் கொடுத்த சிவாஜி… கோபப்பட்ட இயக்குனர்.. கடைசில தோல்வியை சந்திச்சதுதான் மிச்சம்…
அதேபோல், சிவாஜியை அழைத்துகொண்டு பல சினிமா நிறுவனங்களுக்கும் அழைத்து சென்று அவருக்காக வாய்ப்பு கேட்பாராம். ஒருமுறை கோவை செண்ட்ரல் ஸ்டுடியோவில் மங்கையர்கரசி என்கிற படத்தின் படப்பிடிப்பு நடந்து வந்தது. அந்த படத்தில் பி.யூ சின்னப்பா ஹீரோவாக நடித்துகொண்டிருந்தார்.
சிவாஜியை அழைத்துக்கொண்டு அங்கு சென்ற எம்.ஆர்.ராதா அப்படத்தின் தயாரிப்பாளரிடம் வாய்ப்பு கேட்டுள்ளார். அவருக்கு வணக்கம் சொல்லிவிட்டு பவ்யமாக நின்றார் சிவாஜி. சிவாஜியை ஏற இறங்க பார்த்த தயாரிப்பாளர் ‘இவன் தேறமாட்டான்’ என ஒரே வார்த்தையில் சொல்லிவிட்டாராம். ஆனால், அதே சிவாஜிதான் சினிமாவில் நடிப்புக்கே இலக்கணமாக மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஓடாதுனு நினைச்ச இயக்குனர்.. நடிப்பால் ஓடவைத்த சிவாஜி கணேசன்… அட அந்த படமா?!..