டைரக்டர் சொல்லியும் கேட்கலயே!.. ஆர்வக்கோளாறில் அடம்பிடித்து விஜய் நடித்த காட்சி!. அட அந்த படமா!..

Vijay
ஆக்ஷன் படங்களைக் கமர்ஷியல் மசாலாவில் கலந்து ஹிட் கொடுப்பவர் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். அஜீத்துக்கு அப்படித்தான் தீனா படத்தைக் கொடுத்து அவரை மாஸ்ஸாகக் காட்டினார். அதுதான் இயக்குனருக்கும் முதல் படம். அந்தப் படத்தில் இருந்து அஜீத்தைத் தல என்றே ரசிகர்கள் அழைக்க ஆரம்பித்து விட்டனர். அதே போல விஜயகாந்துக்கு ரமணா என்ற சூப்பர்ஹிட் படத்தைக் கொடுத்தார். அதே போல சூர்யாவுக்கு கஜினி, ஏழாம் அறிவு என சூப்பர்ஹிட் படங்களைக் கொடுத்தார்.
ஏ.ஆர்.முருகதாஸின் படங்கள் என்றாலே அதுவும் விஜய் காம்பினேஷன் என்றால் சொல்லவே வேண்டாம். படம் பிளாக் பஸ்டர் ஹிட் தான். பாடல்களும் சரி. பைட்டும் சரி. திரையரங்கையே தெறிக்க விடும். ரசிகர்களின் ஆரவாரத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு பல மாஸ் காட்சிகளும், பஞ்ச் வசனங்களும் இடம்பெறும். விஜய் உடன் இவர் துப்பாக்கி மற்றும் கத்தி என இரண்டு சூப்பர்ஹிட் படங்களை கொடுத்தார்.

ARM SK
கத்தி படத்தின் சூட்டிங்கில் நடந்த ஒரு சுவாரசியமான சம்பவத்தைப் பற்றி ஏ.ஆர்.முருகதாஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார். விஜய் இந்தப்படத்தில் போராட்டத்தின்போது கைது செய்வது போல ஒரு காட்சி வரும். அந்தக் காட்சியில் தன்னை தரதரவென இழுத்து வந்து வேனில் பிடித்துத் தள்ளுமாறு முருகதாஸிடம் விஜய் சொன்னாராம்.
அதற்கு இயக்குனர் அவரது ரசிகர்களை மனதில் கொண்டு அப்படி எடுக்க மறுத்துவிட்டாராம். ஆனாலும் விஜயும் விடுவதாக இல்லை. இந்தக் காட்சியில் இப்படி எடுத்தால் தான் சிறப்பாக வரும் என்றாராம். அதன்பின்னர் தான் இயக்குனரும் சம்மதித்து அந்தக் காட்சியை எடுத்தாராம்.
போலீஸ் ஸ்டேஷனில் வெறும் டிரவுசருடன் விஜய் இருப்பது போன்ற காட்சிக்கும் இயக்குனர் மறுத்துவிட்டாராம். உடனே விஜய் தானே அதற்குரிய காஸ்டியூமை செலக்ட் செய்து நடிப்பில் மிரட்டினாராம். தற்போது சிவகார்த்திகேயனுடன் எஸ்கே 23 என்ற படத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் இணைந்துள்ளார். இதனால் சிவகார்த்திகேயனும் பெரிய ஆக்ஷன் ஹீரோவாக உருவெடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.