Connect with us

Cinema History

கமர்ஷியல் படத்தை எப்படி மெகா ஹிட்டாக்குவது என்பதை தெரிந்த இயக்குனர் இவர் தான்…!

இந்திய சினிமாவில் ஒரே ஆண்டில் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்ய வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்.

தமிழகத்தில் கள்ளக்குறிச்சியில் 1974ல் பிறந்தார். இவரது முழுப்பெயர் முருகதாஸ் அருணாச்சலம். திருச்சி பிஷப் கல்லூரியில் மேற்படிப்பை முடித்தார். ஓவியம் வரைவது, நடிகர்களைப் போல மிமிக்ரி செய்வது என்றால் இவருக்கு அலாதி பிரியம். அந்தக்காலத்தில் சினிமா மீது தணியாத மோகம் கொண்டவர். இவர் அப்போது ஒரே வாரத்தில் 7 படங்கள் பார்த்தாராம்.

பத்திரிகைகளுக்கு ஜோக் எழுதுவது இவரது வாடிக்கை. இந்த காலகட்டத்தில் தான் சினிமா ஆர்வம் அதிகரித்தது. எம்ஜிஆர் திரைப்பட நகரத்திற்கு விண்ணப்பித்திருந்தார். அப்போது அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. அந்த நிராகரிப்பு தான் அவரை இந்த அளவுக்கு உயர்த்தி விட்டது.

18 முதல் 20 வயது ஆகும்போது 80களில் வெளியான 16 வயதினிலே, முதல் வசந்தம் படங்களில் கதையாசிரியராகப் பணியாற்றிய கலைமணியிடம் உதவியாளராகச் சேர்ந்தார் முருகதாஸ்.

2 வருடங்கள் இவருடன் பணியாற்றிய முருகதாஸ் கமர்ஷியல் படங்களில் எப்படி பணியாற்றுவது என்று கற்றுக் கொண்டார். 1997ல் வெளியான ரட்சகன் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றினார். குஷி படத்தில் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யாவுடன் இணைந்து பணியாற்றினார். இவர் தான் தல அஜீத்துக்கு ஏ.ஆர்.முருகதாஸை அறிமுகப்படுத்தினார்.

ஏ.ஆர்.முருகதாஸ் – அஜீத் கூட்டணியில் முதல் படமாக அதிரடியாகக் களமிறங்கியது தீனா. படம் மாபெரும் வெற்றியைப் பெற்றது. அரசு அலுவலகங்களில் நடக்கும் ஊழலை மையப்படுத்தி வெளியான படம் ரமணா.

deena Ajith

இந்தப்படமும் மெகா ஹிட்டானது. அரசியல் வட்டாரங்களிலும் பரபரப்பாகப் பேசப்பட்டது. 2005ல் சூர்யா நடிப்பில் வெளியான கஜினி படம் செம மாஸ் ஹிட்டானது. இந்தப்படம் தமிழில் மட்டுமின்றி பாலிவுட்டிலும் ஹிட்டானது.

2008ல் அமீர்கான் நடிப்பில் கஜினி பாலிவுட்டில் வெளியானது. அங்கு 100 கோடியை முதன் முதலில் வசூலித்த படம் இதுதான்.

2011ல் சூர்யாவுடன் இணைந்து ஏழாம் அறிவு படத்தை எடுத்தார். இது உலகளாவிய வரவேற்பைப் பெற்றது. வசூலிலும் சாதனை படைத்தது. 2012ல் விஜய் நடிப்பில் வெளியான துப்பாக்கி படம் சக்கை போடு போட்டது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்தப்படத்தை மிகவும் ரசித்துப் பார்த்தனர்.

இது பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் உருவான எந்திரன் படத்தின் வசூலான ரூ.180 கோடியைத் தொட்டு சாதனை படைத்தது.

முருகதாஸின் இயக்கத்தில் 2015ல் விஜய் நடிப்பில் வெளியான கத்தி படம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டது. விவசாயிகளுக்கு ஆதரவாக எடுக்கப்பட்டது. இதே ஆண்டில் பாலிவுட்டில் வெளியான படம் ஹாலிடே. இதுவும் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

ஒரே ஆண்டில் இரு படங்களை 100 கோடிக்கு மேல் வசூல் ஈட்ட வைத்த ஒரே இயக்குனர் என்ற பெருமையைப் பெற்றார் ஏ.ஆர்.முருகதாஸ். 2018ல் மீண்டும் விஜய் உடன் இணைந்து சர்கார் படத்தை இயக்கினார்.

A.R.M.Doss

இது அரசியல் களத்தில் ஆதரவையும், எதிர்ப்பையும் ஒரு சேர பெற்றது. இந்தப்படம் வெளிவருவதற்கு முன்பே சர்ச்சையில் சிக்கியது. முருகதாஸ்க்கு பெரும் தலைவலியாக இருந்தது இந்தப் படம் தான். இயக்குனர் பாக்யராஜ் தலைமையிலான குழு 91 சதவீத காட்சிகள் வருண் ராஜேந்திரன் என்பவர் எழுதிய செங்கோல் திரைப்படத்தின் கதை என்று தெரிவித்தனர். இந்தக்கருத்தை முதலில் ஏற்க மறுத்த முருகதாஸ் பின்பு படத்தில் வருண்ராஜேந்திரனின் பெயரைப் போட ஒப்புக்கொண்டார். அதன்பின்பே படம் வெளியானது.

2000ல் கிறிஸ்டோபர் நோடன் இயக்கிய படமான மொமண்டோ படம் தான் 2004ல் வெளியான கஜினி படம் என்பதும் தெரியவந்தது. ரமணா படத்தின் கதை ஆசான் படத்தின் கதை எனவும் அதனால் தான் எனக்கு விஜய்காந்த் தென்னவன் படவாய்ப்பைக் கொடுத்தார் என அப்படத்தின் இயக்குனர் நந்தகுமார் தெரிவித்துள்ளார். கத்தி படமும் கதைத் திருட்டில் சிக்கி சர்ச்சையை எழுப்பின.

google news
Continue Reading

More in Cinema History

To Top