பொண்டாட்டியிடம் 1 கோடி ரூபாய் கேட்ட ஏ.ஆர்.ரகுமான்... யுவனையும் இப்படி கெடுத்து வச்சிடீங்களே.?!

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான யுவன் சங்கர் ராஜா தற்போது பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். அவரது இசையை பற்றி சொல்லியே தெரியவேண்டாம். அந்த அளவிற்கு தரமான இசைகளை இன்னும் கொடுத்து வருகிறார். ஒரு நடிகருக்கு எந்த அளவிற்கு ரசிகர்கள் பட்டாளம் உள்ளார்கள் அதே அளவிற்கு இவருக்கும் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.
இதற்கிடையில், தனது மனைவி மற்றும் இயக்குனர் செல்வராகவன், அவருடைய மனைவி கீதாஞ்சலி ஆகியோர் சமீபத்தில் ஊடகத்தில் நடைபெற்ற ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்.
அதில், யுவனிடம் பல கேள்விகள் கேட்டகப்பட்டது. அப்போது யுவனின் மனைவி ஜஃப்ரூன் பல உண்மைகளை கூறிவிட்டார். ஆம், வீட்டில் இருக்கும் போது ஜஃப்ரூன் யுவனை ஆசையாக பாட்டு பாட சொல்வாராம்.
இதையும் படியுங்களேன்- நயன்தாரா செய்த வேலையால் உச்சகட்ட கோபத்தில் நெட்பிளிக்ஸ்.. அந்த வீடியோவின் நிலைமை.?!
அதற்கு யுவன் காசு கொடு பாடுகிறேன் என சொல்வாராம். இதற்கு முன்பு ஏஆர் ரஹ்மான் வீட்டிற்கு விருந்திற்கு சென்ற போது அவருடைய மனைவி ரகுமானிடம் ஆசையாக பாட்டு பட சொல்வாராம். அதற்கு ரஹ்மான் 1 கோடி கொடு பாடுகிறேன் என்பாராம். அதைபோல் யுவனும் காசு கொடுத்தால் பாடுகிறேன் என சொல்லவிடுவாராம்.
அதையும் மீறி பாட்டு பட சொன்னால் மிகவும் மொக்கையாக பாடிவிட்டு சென்றுவிடுவாராம். இதனை கலகலப்பாக யுவனின் மனைவி ஜஃப்ரூன் தெரிவித்துள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் ஏ.ஆர்.ரகுமான் யுவனையும் இப்படி கெடுத்து வச்சிடீங்களே என கூறி வருகிறார்கள்.