மறக்குமா நெஞ்சம்! உசுரே!.. மனைவிக்காக உருகி பாட்டு பாடிய ஏ.ஆர் ரகுமான்?!… வைரலாகும் வீடியோ!…

Published on: November 20, 2024
divorce
---Advertisement---

விருது விழா ஒன்றில் இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் தனது மனைவிக்காக பாட்டு பாடிய பழைய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றனர்.

இந்திய சினிமாவிலேயே முன்னணி இசையமைப்பாளராக வளம் பெறுபவர் ஏ.ஆர் ரகுமான். இவரின் மனைவி சாய்ரா பானு தனது கணவர் ஏ.ஆர் ரகுமானை பிரிவதாக அறிவித்திருந்தது சமூக வலைதள பக்கங்களில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. தமிழ் சினிமாவில் ரோஜா என்ற திரைப்படத்தின் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னட மொழிகளில் பல படங்களுக்கு இசையமைத்து இந்தியாவிற்கு பெருமை சேர்த்தவர்.

இதையும் படிங்க: ரசிகர்கள் கண்டுகொள்ளாத நயனின் கல்யாண கேசட்!.. இதுக்குதான் இவ்வளவு அக்கப்போறா!…

ஒரே படத்திற்காக இரண்டு ஆஸ்கார் விருதுகளை வென்ற ஆஸ்கார் நாயகன். இவர் 1995 ஆம் ஆண்டு சாய்ரா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு கதீஜா, ரஹீமா மற்றும் அமீன் என்று மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள். இதில் மூத்த மகள் கதீஜாவுக்கு திருமணம் நடைபெற்று முடிந்தது.

29 வருடம் சேர்ந்து வாழ்ந்த ஏ ஆர் ரகுமான் சாய்ரா தம்பதியினர் தற்போது தங்களது திருமண வாழ்க்கையை முடித்துக் கொண்டிருக்கிறார்கள்.  இந்த தகவல் நேற்றிலிருந்து சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகின்றது. மேலும் இவர்கள் இருவரும் பிரிந்ததற்கு என்ன காரணம் என்று பலரும் கேட்டு வருகிறார்கள்.

shaira
shaira

நேற்று சாய்ரா வெளியிட்ட பதிவில் திருமணமாகி பல வருடத்திற்கு பிறகு கனத்த இதயத்துடன் தனது கணவர் ஏ ஆர் ரகுமானை பிரிந்து செல்லும் கடினமான முடிவை எடுத்து இருக்கிறோம்.வாழ்வில் ஏற்பட்ட வலி மற்றும் வேதனையின் காரணமாக பிரியும் முடிவை எடுத்திருக்கின்றேன்.

ஆழமான யோசனைக்குப் பிறகு விவாகரத்து பெருவது என்ற கடினமான முடிவை எடுத்துள்ளோம் என்று தெரிவித்திருந்தார். இந்த பதிவு நேற்றிலிருந்து வைரலாகி வந்த நிலையில் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் மற்றும் சாய்ரா தம்பதியின் பழைய வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இதையும் படிங்க: ரசிகர்கள் கண்டுகொள்ளாத நயனின் கல்யாண கேசட்!.. இதுக்குதான் இவ்வளவு அக்கப்போறா!…

அந்த வகையில் 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற விகடன் விருது வழங்கும் விழாவில் ஏ ஆர் ரகுமான் தனது மனைவியை மேடைக்கு அழைத்து அவரின் விருதை சமர்பித்து இருப்பார். மேலும் எனது குரலுக்கு மிகப்பெரிய ரசிகை என் மனைவி தான் என்று அவரைப் பற்றி புகழ்ந்து இருப்பார். தனது மனைவிக்காக மறக்குமா நெஞ்சம் என்ற பாடலையும் அவர் பாடியிருப்பார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் நடிகர்கள் பலரும் யார் கண்ணு பட்டுச்சோ தெரியல இப்படி ஆகிவிட்டதே என்று வருத்தத்துடன் பதிவிட்டு வருகிறார்கள்.

ramya suresh

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.