இளையராஜாவிடம் எனக்குப் பிடித்த விஷயம் இதுதான்.... 'நச்' சென்று போட்டு உடைத்த ஏ.ஆர்.ரகுமான்

by sankaran v |
இளையராஜாவிடம் எனக்குப் பிடித்த விஷயம் இதுதான்.... நச் சென்று போட்டு உடைத்த ஏ.ஆர்.ரகுமான்
X

A.R.Rahman 2

இளையராஜாவுக்கும், ஏ.ஆர்.ரகுமானுக்கும் அடிக்கடி சந்தித்துக் கொள்வதில்லை. ஒருவரை ஒருவர் பற்றிக் கருத்துக் கூறுவதில்லை. ஆனால் சமீபத்தில் ஏ.ஆர்.ரகுமான் ஆஸ்கர் விருது பெற்ற கீரவாணி பற்றியும், இசைஞானி இளையராஜா பற்றியும் வாய் திறந்துள்ளார். இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் சமீபத்தில் கொடுத்த பேட்டியில் இவ்வாறு தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.

எனக்கு சைக்கிள் ஓட்றது ரொம்பப் பிடிக்கும். கேரளால இருக்கும்போது ஓட்டிருக்கேன். மியூசிக், மூவி பார்க்குறது தான் பொழுது போக்கு.

A.R.Rahman

அது கூட எவ்ளோ நேரம் பாரக்க முடியும்...? டிராவல் பண்றது ரொம்பப் பிடிக்கும். வேற நாட்டுக்கு... வேற மாநிலத்துக்குன்னு போகும் போது நமக்குள்ள ஒரு வைப்ரேஷன் வரும். அது புதுப்புது எண்ணங்களை உண்டாக்கி நம்மை பிரஷாக்கும்.

ஒரு இசைக்கலைஞன்னா அவன் தண்ணி அடிப்பான். பொண்ணுங்களோட சுத்திக்கிட்டு இருப்பான்.

A.R.Rahman , Ilaiyaraja

அவனுக்குக் கேரக்டர் இருக்காது என்கிற களங்கத்தை உண்டுபண்ணிட்டாங்க. இதனால இசைக்கலைஞனா அய்யய்யோ.... அந்தப் பக்கம் போகாதே... நீ பாடப் போறீயா... ஜாக்கிரதையா இரு. இளையராஜா சாருக்கிட்ட தான் பர்ஸ்ட் நான் பார்த்தேன். அந்த களங்கத்தை உடைத்தெறிந்தவர் இளையராஜா.

ஒரு சாமியார் மாதிரி உட்கார்ந்துக்கிட்டு தண்ணி அடிக்க மாட்டாரு, தம் அடிக்க மாட்டாரு. வேற கெட்டப்பழக்கம் கிடையாது. மியூசிக்னால அவ்ளோ ரெஸ்பெக்ட். அந்த விஷயம் இன்னும் என்னை பாதிச்சிட்டு. அவரைப் பார்க்கும்போது நடுங்குவாங்க. எதனாலன்னா அவரோட கேரக்டரனால. நான் வரும்போது அந்த ஸ்டூடியோவுல அவ்ளோ ரெஸ்பெக்ட்.

ஒரு மனுஷன்னு இருந்தா கலையை விட உள்ளுக்குள்ள இருக்குற ஸ்பிரிச்சுவல் எனர்ஜி... வந்து எந்த விஷயத்துல போனாலும் அதுல நல்லா பண்ணனும்... அந்த இன்டன்சன் இருக்கும்போது அதுல நல்லா ஆயிடுவோம்.

அதுக்கு மெனக்கிட்டு நாம உள்ளே போணும்... அந்த பர்பெக்ஷன் வர்ற வரைக்கும் நாம உழைச்சிட்டு உள்ளே போகும்போது நாம நினைக்கிற மாதிரி செய்ய முடியும். மியூசிக்னு வந்துட்டு. என் தலை எழுத்துல எழுதியாச்சு. எங்க அம்மா வந்து உனக்கு மியூசிக் தான்டான்னு சொல்லிட்டாங்க. அதுக்கு உள்ளே போயிடுவேன்.

Mannippaya song

அவ்ளோ தான். இதுக்கு இவ்ளோ தான் காசு கொடுக்குறாங்க... இந்த மாதிரி தான் ஒர்க் பண்ண முடியும் அப்படின்னுலாம் ஒண்ணுமே இல்ல. என்னால முடிஞ்ச வரைக்கும்... எனர்ஜி இருக்கு... நான் கொடுக்கத் தயாரா இருக்கேன். என் பசங்களுக்கும் அதைத் தான் சொல்வேன். அதே சமயத்துல உஷாராவும் இருக்கணும். ரொம்ப உஷாரா இருக்கணும்...

கொஞ்சம் கேர்புல்லா மியூசிக் போட்டா எல்லா ஆடியன்ஸையும் திருப்திப்படுத்த முடியும்.

ஒரு பாட்டுல கருத்து ரொம்ப முக்கியம். அதுல நாம என்ன சொல்ல வர்றோம்? மன்னிப்பாயாங்கற சாங்... நானும் தாமரையும் சீக்ரெட்டா ஒர்க் பண்ணுனோம். நாம மன்னிப்பாயான்னு போட்டு கௌதம் கிட்ட பிரசண்ட் பண்ணுவோம். அவங்களுக்குப் பிடிச்சிருந்தா எடுத்துக்கிடட்டும். அவரு வந்து அதை ஏத்துக்கிட்டாரு.

Next Story