நீலாம்பரி தான் ஜெயலலிதா..படையப்பாவை வெளுத்துவாங்கிய கட்சிக்காரர்கள்…? இப்படியெல்லாமா பண்ணாங்க!!
2000 ஆம் ஆண்டு ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், சௌந்தர்யா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “படையப்பா”. இத்திரைப்படத்தை கே எஸ் ரவிக்குமார் இயக்கியிருந்தார். ஏ ஆர் ரஹ்மான் இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். ரஹ்மான் இசையில் பாடல்கள் அனைத்தும் தாருமாறான ஹிட் அடித்தது.
ரஜினிகாந்த் கேரியரில் ஒரு முக்கிய வெற்றித்திரைப்படமாக “படையப்பா” அமைந்தது. தமிழகத்தில் பல திரையரங்குகளில் 100 நாட்களுக்கும் மேல் ஓடி செமத்தியான வசூலைப் பார்த்தது. இத்திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணன் ஏற்று நடித்த நீலாம்பரி கதாப்பாத்திரம் தமிழ்சினிமாவின் மாஸ் வில்லி கதாப்பாத்திரமாக அமைந்தது. ரம்யா கிருஷ்ணன் "நீலாம்பரி" கதாப்பாத்திரத்திற்கு மிகவும் பொருத்தமாக இருந்தார். ரசிகர்களால் இக்கதாப்பாத்திரம் பெரிதும் ரசிக்கப்பட்டது. அந்தளவுக்கு ரம்யா கிருஷ்ணன் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
“படையப்பா” திரைப்படத்தில் இடம்பெற்ற “அதிகமா ஆசப்படுற ஆம்பளையும், அதிகமா கோபப்படுற பொம்பளையும் நல்லா வாழ்ந்ததா சரித்திரமே கிடையாது” என்ற வசனம் மிகவும் பிரபலமான வசனமாக அறியப்பட்டது.
இந்த நிலையில் இத்திரைப்படம் வெளிவந்தபோது “இந்த வசனங்கள் எல்லாம் ஜெயலலிதாவை தாக்கி எழுதப்பட்ட வசனங்கள்” என விமர்சனங்கள் வந்தனவாம். இதனால் சம்பந்தப்பட்ட கட்சிக்காரர்கள் ரஜினிகாந்தை வசைப்பாடியிருக்கிறார்கள்.
எனினும் அந்த சர்ச்சை அத்தோடு நின்றுப்போனதாம். ஜெயலலிதா இது குறித்து எதுவும் பேசவில்லையாம். இவ்வாறு “படையப்பா” திரைப்படத்திற்கு புதுவிதமான சர்ச்சை எழுந்ததாக திண்டுக்கல் லியோனி ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
இந்த சர்ச்சைக்குப் பின்னால் ஒரு காரணமும் கூறப்படுகிறது. அதாவது 1996 ஆம் ஆண்டு தேர்தல் சமயத்தில் ஜெயலலிதாவுக்கு எதிராக ரஜினி பேசினார் என செய்திகள் வெளிவந்தது. இதன் தொடர்ச்சியாகத்தான் “படையப்பா” திரைப்படத்தில் ஜெயலலிதாவை தாக்கி வசனம் வைக்கப்பட்டதாக வதந்திகள் பரவியதாம். இப்படியெல்லாமா வதந்தியை பரப்புவார்கள்??