தெலுங்கில் அதிரடி ஆக்சன் ஹீரோவாக வலம் வருபவர் பாலகிருஷ்ணா. ரசிகர்கள் இவரை பாலையா என அழைக்கிறார்கள். உலகமெங்கும் உள்ள தெலுங்கு பேசும் மக்களில் பலரும் பாலையாவின் ரசிகர்களாக இப்போதும் இருக்கிறார்கள். அதனால்தான் அவரின் திரைப்படங்கள் வெளிநாட்டிலும் நல்ல வசூலை பெறுகிறது. 50 வருடங்களாக ஹீரோவாக மட்டுமே நடித்து வருகிறார் பாலையா.
பாலையா படம் என்றாலே அனல் பறக்கும் பன்ச் வசனம்ம் ஆக்சன் காட்சிகள் இடம் பெற்றிருக்கும். அவரிடம் அவர்களின் ரசிகர்கள் எதிர்பார்ப்பதும் அதுதான், இன்னும் சொல்லப்போனால் இவர் நடித்து வெளியான பகவந்த் கேசரி படத்தைதான் தமிழில் விஜய் நடிக்க ஜனநாயகன் என்கிற பெயரில் உருவாக்கி இருக்கிறார்கள். பாலையாவின் நடிப்பில் வெளிவந்த அகாண்டா திரைப்படம் அவர் ரசிகர்களின் பேவரைட் படமாக இருக்கிறது. அந்த படத்தின் இரண்டாம் பாகம் நேற்று உலகமெங்கும் வெளியாகவிருந்தது. ஆனால் சில காரணங்களால் அப்படம் வெளியாகவில்லை.
இந்நிலையில்தான் பாலையாவுக்கு ஒரு வெறித்தனமான ரசிகர் சென்னையிலேயே இருப்பது தெரிய வந்திருக்கிறது. அதுவும் சிறுவன். இந்த சிறுவன் கடந்த 2 வருடங்களில் அகாண்டா படத்தை 100 முறைக்கு மேல் பார்த்திருக்கிறாராம். அவருக்கு எப்படியாவது பாலையாவை நேரில் பார்க்கவேண்டுமென்பது நீண்ட நாள் ஆசை. அது சமீபத்தில் அகண்டா 2 திரைப்படத்தின் புரமோஷன் விழாவுக்கு பாலையா சென்னை வந்த போது நடந்திருக்கிறது. அந்த சிறுவனுடன் பாலையா போட்டோவும் எடுத்துக்கொண்டார்.
அந்த சிறுவனிடம் ‘தெலுங்கில் பிரபாஸ், அல்லு அர்ஜுன், ஜூனியர் என்டிஆர், ராம்சரண், மகேஷ்பாபு போன்ற இளம் நடிகர்கள் இருக்கும்போது உனக்கு ஏன் பாலையாவை பிடிக்கிறது?’ என்று கேட்டதற்கு ‘நீங்கள் சொல்வது உண்மைதான். ஆனால் அவர்களே பாலையா படங்களை பார்த்துதான் சண்டை காட்சிகளை கற்றுக் கொள்கிறார்கள்’ என்று பதில் சொல்லியிருக்கிறார் அந்த குட்டி ரசிகர்.
தெலுங்கில் மட்டுமல்ல தமிழில் விஜய், அஜித், தனுஷ், சிவகார்த்திகேயன், சிம்பு போன்ற நடிகர்களை விட அந்த சிறுவனுக்கு பாலையாவைத்தான் பிடித்திருக்கிறதாம்.
சிவகார்த்திகேயன், ரவி…
தமிழ் சினிமாவில்…
அமராவதி திரைப்படம்…
நடிகர் விஜயகாந்துக்கும்…
ரசிகர்களால் சூப்பர்ஸ்டார்…