ஆர்டர் போட்ட சிவகார்த்திகேயன்… கடுப்பான இயக்குனர்… இப்பவே இப்படி முட்டிக்கிறாங்களே!!

Sivakarthikeyan
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான “பிரின்ஸ்” திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மரியா என்ற ஆங்கிலேயர் நடித்துள்ளார். மேலும் இதில் சத்யராஜ் ஒரு முன்னணி கதாப்பாத்திரத்திலும் நடித்துள்ளார். “பிரின்ஸ்” திரைப்படத்தை அனுதீப் கே.வி. இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன் தெலுங்கில் “ஜதி ரத்னலு” என்ற வெற்றித் திரைப்படத்தை இயக்கியவர்.

Prince
“பிரின்ஸ்” திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாகிறது. இத்திரைப்படத்தின் அட்டகாசமான டீசர் சமீபத்தில் வெளியானது. மேலும் இத்திரைப்படம் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய சிவகார்த்திகேயன் “ஒரு நல்ல காமெடி திரைப்படமாக பிரின்ஸ் உருவாகியிருக்கிறது” என கூறியுள்ளார். ஆதலால் இத்திரைப்படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு இருக்கிறது.
சிவகார்த்திகேயன் தற்போது “மாவீரன்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை “மண்டேலா” இயக்குனர் மடோன்னே அஸ்வின் இயக்கி வருகிறார்.

Maaveeran
இந்த நிலையில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது இயக்குனருக்கும் சிவகார்த்திகேயனுக்கும் இடையே உரசல் ஏற்பட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சிவகார்த்திகேயன் ஸ்கிரிப்ட்டில் சில காட்சிகளை மாற்றவேண்டும் என கூறினாராம். ஆனால் இயக்குனர் மடோன்னே அஸ்வின் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லையாம். ஆதலால் இருவருக்குள்ளும் உரசல் ஏற்பட்டிருக்கிறதாம். ஆதலால் உதவி இயக்குனர்கள் இவர்கள் இருவரையும் அவ்வப்போது சமாதானப்படுத்தி வருகிறார்களாம். இவ்வாறு ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

Madonne and Sivakarthikeyan
“மாவீரன் திரைப்படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்புதான் தொடங்கியது. இப்போதே இவர்களுக்கு மத்தியில் உரசல் ஆரம்பித்துவிட்டதே” என ஆங்காங்கே பேச்சுக்கள் எழுகின்றன. எனினும் உதவி இயக்குனர்கள், இயக்குனருக்கும் சிவகார்த்திகேயனுக்கும் இடையில் ஏற்படும் மனஸ்தாபங்களை ஒருவாறு சமாளித்து படப்பிடிப்பிற்கு எந்த பங்கமும் விளையாமல் பார்த்துக்கொள்கிறார்களாம்.