ரஜினிகாந்தும் சுந்தர்-சியும் இல்லன்னா எனக்கு வாழ்க்கை இல்ல!.. உருகும் பிரபல நடிகர்...

by Rajkumar |   ( Updated:2023-04-08 02:45:54  )
ரஜினிகாந்தும் சுந்தர்-சியும் இல்லன்னா எனக்கு வாழ்க்கை இல்ல!.. உருகும் பிரபல நடிகர்...
X

பல நடிகர்களுக்கு சினிமாவில் பெரும் இடத்தை பிடிப்பதற்கு ஏதாவது ஒரு பிரபலம் உதவியிருப்பார்கள். நடிகர் தனுஷ் ஆரம்பக்கட்டத்தில் செய்த உதவிகள்தான் சிவகார்த்திகேயனை தமிழ் சினிமாவில் பெரும் நட்சத்திரமாக்கியது.

ஆனால் கீழ்நிலையில் இருக்கும் நடிகர் ஒருவரை தமிழில் பெரும் புள்ளிகளாக இருக்கும் இரு பிரபலங்கள் வளர்ந்துவிட்டுள்ளனர். நடிகரும் ஸ்டண்ட் மாஸ்டருமான தளபதி தினேஷின் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளனர் ரஜினி மற்றும் சுந்தர் சி.

ஆரம்பக்காலத்தில் தளபதி தினேஷ் தமிழ் சினிமாவில் வெறும் ஸ்டண்ட் மாஸ்டராக தான் இருந்தார். தளபதி படத்தில் ரஜினியுடன் நடித்தார். அதன் பிறகு எஜமான் இன்னும் பல படங்களில் ரஜினியுடன் சேர்ந்து நடித்தார். இதனால் இவர்கள் இருவருக்குமிடையே நல்ல நட்பு உருவானது.

தக்க சமயத்தில் உதவிய பிரபலங்கள்:

இந்நிலையில் பாட்ஷா படத்தில் தன்னுடன் இருக்கும் ஆளாக தளபதி தினேஷை நடிக்க வைத்தார் ரஜினி. அந்த கதாபாத்திரம் மூலம் இந்தியா முழுக்க தளபதி தினேஷின் முகம் அனைவருக்கும் பரிச்சையமானது. அதன் பிறகு அதிக வாய்ப்புகளை பெற்றார் தளபதி தினேஷ்.

அதன் பிறகு வயதானவுடன் சினிமாவில் இருந்து ஃபீல்ட் அவுட் ஆகியிருந்தார் தளபதி தினேஷ். இந்த சமயத்தில்தான் இயக்குனர் சுந்தர் சி கலகலப்பு திரைப்படத்தில் நடிக்க தளபதி தினேஷை அழைத்தார். அழைக்கும்போதே இதில் நீங்கள் காமெடியன் என கூறியுள்ளார் சுந்தர் சி. மக்கள் எப்படி சார் ஏத்துப்பாங்க என சந்தேகமாக கேட்டுள்ளார் தளபதி தினேஷ்.

ஆனால் அந்த படத்தில் அவரது காமெடிகள் மிகவும் பிரபலமாகின. பிறகு அது அவருக்கு அதிக வாய்ப்பை பெற்று தந்தன. இவர்கள் இருவரும் இல்லை என்றால் பல ஸ்டண்ட் மேன்களை போல, மக்கள் மத்தியில் முகமே தெரியாத ஒரு ஸ்டண்ட் மேனாக இருந்திருப்பேன் என ஒரு பேட்டியில் கூறியுள்ளார் தளபதி தினேஷ்.

இதையும் படிங்க: விட்டிருந்தா அப்பயே செத்துருப்பேன்..- தளபதி தினேஷ்க்கு நடக்கவிருந்த விபரீதம்!.

Next Story