நான் சொல்ற மாதிரி செஞ்சாதான் பணத்தை கொடுப்பேன்.. – ரஜினி படத்தில் ரூல்ஸ் போட்ட தயாரிப்பாளர்!
மாஸ் ஹிட் கொடுக்கும் தமிழ் நட்சத்திரங்களில் முக்கியமானவர் ரஜினிகாந்த். அவர் திரையில் வந்து நின்றாலே அவரது படம் ஹிட் அடிக்கும் என்று ரஜினிகாந்திற்கு ஒரு பெயர் உண்டு.
அந்த அளவிற்கு பல வருடங்களாக தமிழ் சினிமாவில் இருந்து அதில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார் ரஜினிகாந்த். அதற்காக அவர் போட்ட உழைப்புகள் ஏராளம். ரஜினி நடித்து பெரும் ஹிட் கொடுத்த படங்களில் முரட்டுக்காளை முக்கியமான திரைப்படம்.
1980இல் இயக்குனர் எஸ்.பி முத்துராமன் இயக்கத்தில் இந்த படம் வெளியானது. ஏ.வி.எம் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்தது. இந்த படத்தில் ரயிலில் சண்டை காட்சிகளை எடுக்கலாம் என திட்டமிடப்பட்டது. எனவே எஸ்.பி முத்துராமன் இதற்காக தென்காசி ரயில் பாதையை தேர்ந்தெடுத்தார்.
ஏனெனில் அப்போதைய காலக்கட்டத்தில் தென்காசி ரயில் பாதையில் காலையிலும், மாலையிலும் மட்டுமே ரயில் போய் வந்தது. மீதி நேரமெல்லாம் எந்த ரயிலும் வராது. அதன் பிறகு அந்த சண்டைக்காக ரயிலும் ஏற்படானாது.
தயாரிப்பு செலவால் பிரச்சனை:
ஆனால் தயாரிப்புக்கு இவர்கள் திட்டமிட்ட தொகையை விடவும் மூன்று மடங்கு அதிக தொகை இருந்தால்தான் அந்த ரயில் சண்டைக்காட்சியை எடுக்க முடியும் என்கிற நிலை. உடனே ஏ.வி.எம் சரவணனை சந்தித்த எஸ்.பி முத்துராமன் இந்த விவரங்களை கூறியுள்ளார்.
இதை கேட்ட ஏ.வி.எம் சரவணன், “நீங்க படத்துக்கு தேவை இல்லாம செலவு செய்ய மாட்டீங்க.. நீங்க கேட்குற தொகையை நான் கொடுக்கிறேன். ஆனால் ஒரு கண்டிஷன், நீங்க எடுக்குற ரயில் சண்டைக்காட்சி இதுவரை தமிழ் சினிமாவில் வராத விதத்தில் இருக்கணும்” என கூறியுள்ளார் ஏ.வி.எம் சரவணன்.
அதே போல எஸ்.பி முத்துராமனும் அந்த சண்டைக்காட்சியை சிறப்பாக எடுத்திருந்தார். அதில் டூப் போடாமல் உயிரை பணயம் வைத்து நடித்திருந்தார் ரஜினிகாந்த்.