ஜோடி பொருத்தம் சூப்பர்பா.... ஆதி - நிக்கி கல்ராணியின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் வைரல்!

by பிரஜன் |   ( Updated:2022-03-27 00:37:10  )
aadhi
X

ஆதி – நிக்கி கல்ராணியின் திருமண நிச்சயதார்த்த புகைப்படங்கள்!

ஆதி - நிக்கி கல்ராணியின் திருமண நிச்சயதார்த்த புகைப்படங்கள்!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக வளம் வந்துக்கொண்டிருப்பவர் நடிகர் ஆதி. மிருகம் படத்தில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி ஹீரோவாக கோலிவுட்டில் அறிமுகமானார் ஆதி. முதல் படத்திலே அவரது நடித்து பெரிதும் பாராட்டப்பட்டது.

nikki galrani

nikki galrani

அதன் பிறகு ஷங்கரின் தயாரிப்பில் உருவான ஈரம் திரைப்படத்தில் நடித்து மேலும் புகழ் பெற்றார். தொடர்ந்து அய்யனார், ஆடு புலி, அரவான், மரகதநாணயம் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இதனிடையே டோலிவுட்டில் சில படங்களில் நடித்து அங்கும் ரசிகர்களை கவர்ந்தார்.

nikki galrani

nikki galrani

இவர் நிக்கி கல்ராணியை காதலித்து வருவதாக அவ்வப்போது கிசு கிசுக்கள் எழுந்தது. ஆதி வீடு விசேஷங்களில் நிக்கி கல்ராணி தவறாமல் பங்கேற்று வந்ததே இதற்கு காரணமாக அமைந்தது. இந்நிலையில் அந்த கிசுகிசுக்கள் எல்லாம் உண்மையாகிவிட்டது.

nikki galrani 2

இதையும் படியுங்கள்: இரண்டாவது குழந்தையை பெற்றெடுத்தார் ஆல்யா மானசா… கியூட்டான புகைப்படம் இதோ!

ஆம், நேற்று இவர்கள் இருவரும் முறைப்படி திருமண நிச்சயதார்த்தம் செய்துக்கொண்டனர். அந்த புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் இருவரும் வெளியிட அது காட்டுத்தீயாக பரவி வைரலாகியுள்ளது. இந்த ஷாக்கிங் நிச்சய புகைப்படங்கள் ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Next Story