Ajith Aadhik: இன்று பரபரப்பாக வெளியாகியிருக்கிறது அஜித்தின் 63வது படத்தின் டைட்டில் லுக் போஸ்டர். தற்போது அஜித் விடாமுயற்சி படத்தில் பிஸியாக இருக்க அவரது அடுத்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குவதாக அறிவிப்பு வெளியானது. இதில் திடீரென அஜித்துக்கு ஏற்பட்ட அறுவை சிகிச்சை காரணமாக விடாமுயற்சி படத்தில் இருந்து சில நாள்கள் அஜித் ஓய்வில் இருப்பார் என தகவல் வெளியானது.
அதே சமயம் லைக்காவுக்கு இருக்கும் பொருளாதார பிரச்சினை காரணமாக முதலில் வேட்டையன் படத்தில் கவனம் செலுத்த அதன் பிறகே விடாமுயற்சி படத்தை கையில் எடுக்கலாம் என்ற முடிவுக்கு வந்ததாகவும் தெரிகிறது. இதனால் விடாமுயற்சி படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு கொஞ்சம் தாமதமாகும் என்று தெரிகிறது. இதற்கிடையில் அஜித் ஆதிக் இணையும் படத்தின் டைட்டில் இன்று வெளியாகி இருக்கிறது.
படத்தின் டைட்டில் குட் பேட் அக்லி என வைக்கப்பட்டுள்ளது. வீரம் படத்தில் இருந்து அஜித்தின் 9 படங்களில் 6 படங்கள் வி செண்டிமெண்டிலேயே படம் வெளியானது. இந்தப் படத்தின் டைட்டில் மூலம் அந்த செண்டிமெண்ட் உடைக்கப்பட்டுள்ளது. அதனால் ரசிகர்கள் கொஞ்சம் உற்சாகமாக இருக்கிறார்கள். இந்த நிலையில் ஆதிக்கின் ஒரு பழைய பேட்டி ஒன்று வைரலாகி வருகின்றது.
இதையும் படிங்க: இந்த கேள்விய கேட்காதீங்க.. பதில் வராது! விமான நிலையத்தில் நிருபர்களுக்கு டாட்டா காட்டிய ரஜினி
ஆதிக் அஜித்தின் தீவிர வெறியன் என அனைவருக்கும் தெரியும். ஆனால் பலருக்கும் தெரியாத ஒரு விஷயத்தை ஆதிக் அந்த பேட்டியில் கூறியிருக்கிறார். பள்ளியில் இருந்தே அஜித் என்றால் ஆதிக்கிற்கு மிகவும் பிடிக்குமாம். கல்லூரி படிக்கும் போது ரசிகர்களுக்கிடையே சண்டை எல்லாம் நடந்து மூஞ்சி மூக்கெல்லாம் உடைத்த கதையெல்லாம் நடந்திருக்கிறது என கூறினார்.
ஒரு சமயம் இனிமேல் நான் பொது வெளியில் வர மாட்டேன். ரசிகர் மன்றம் வேண்டாம், ரசிகர்களை சந்திக்க மாட்டேன் என அஜித் கூறிய பிறகு ஆதிக் அவருடைய நண்பர்கள் 4 பேர் அஜித்தின் வீட்டின் முன் நின்று நள்ளிரவில் கத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினார்களாம். தல வெளியே வா என்றெல்லாம் கத்தினாராம். ஆனால் வழக்கம் போல அஜித் வரவே இல்லையாம். அவர் வரவில்லை என்றாலும் நம் வேலையை சரியாக செய்ய வேண்டும் என அவருடைய ஆதங்கத்தை அன்று கொட்டி தீர்த்துக் கொண்டாராம் ஆதிக்.
இதையும் படிங்க: நெய்வேலியில் விஜய் செல்பி!… அட இதுக்கு பின்னாடி இப்படி ஒரு ஆச்சரிய காரணம் இருக்கா?
அதே போல் தல தல தல என சொல்லிக் கொண்டே மனதிற்குள் ஒரு வெறியை ஏற்றிக் கொள்வாராம். எந்த கதை எழுதினாலும் முதலில் அஜித்தை மனதில் வைத்துதான் எழுதுவாராம். இப்படிப்பட்டவரின் டைரக்ஷனில் அஜித் நடிக்க இருக்கிறார் என்றால் படம் எந்த மாதிரி வரும் என இப்போதிலிருந்தே ஆர்வம் அதிகரிக்க தொடங்கிவிட்டது.
Vijay tv:…
Rj Balaji:…
விமர்சனம் செய்வது…
விஜய் அக்டோபர்…
கார்த்திக் சுப்புராஜ்…