Aadhik Ravichandran: தமிழ் சினிமாவில் சமீபத்தில் நடந்த கல்யாணம். ஆனால் சமூக வலைத்தளத்தில் நிறைய விமர்சிக்கப்பட்ட ஜோடி என்றால் அது ஆதிக் ரவிசந்திரன் மற்றும் ஐஸ்வர்யா தான். இவர்கள் திருமணத்தில் இன்னும் வெளிவராத பல தகவல்கள் இருப்பதாக பிரபல திரை விமர்சகர் தெரிவித்து இருக்கிறார்.
த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தினை இயக்கி கோலிவுட்டுக்குள் எண்ட்ரி கொடுத்தவர் ஆதிக் ரவிச்சந்திரன். முதல் படத்தின் பெயர் ரீச் கொடுத்த அளவுக்கு கூட படம் ஹிட்டடிக்கவில்லை. அதையடுத்து சிம்புவை வைத்து அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படத்தினை இயக்கினார். அதில் எக்கசக்க பிரச்னை.
இதையும் படிங்க: ஏலே இதுக்கெல்லாம் விவகாரத்தா..? ஐஸ்வர்யா வீட்டுல கூட இந்த பிரச்னை தானாம்… சுத்தம்..!
ஆனால் படமும் புஸ் தான். இப்படி இருக்க இவர் இயக்கத்தில் சமீபத்தில் ரிலீஸாக மார்க் ஆண்டனி மிகப்பெரிய வசூலை குவித்தது. அதே சமயம் பாராட்டுக்களை பெற்றது. இதை தொடர்ந்து தற்போது ஆதிக் ரவிசந்திரன் அஜித்தை இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. அந்த நேரத்தில் தான் அவர் நடிகர் பிரபு மகள் ஐஸ்வர்யாவை மணந்தார்.
அந்த திருமணம் நடந்த போது இது ஐஸ்வர்யாவுக்கு இரண்டாம் திருமணம் என்று தான் எல்லா மீடியாக்களிலும் பேசப்பட்டது. ஆனால் இது இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கே இரண்டாம் திருமணம் தான் என பிரபல திரை விமர்சகர் சபிதா ஜோசப் தெரிவித்து இருக்கிறார். மேலும் அவர் கூறும் போது அவருக்கு துணை சரியாக அமையவில்லை.
இதையும் படிங்க்: நான்தான்னு யார் சொன்னா?.. என்னை வாழ வச்சதே ரஜினிதான்!.. மனம் திறந்து பேசிய பாலச்சந்தர்…
இரண்டு பேருமே கஷ்டத்தில் இருந்த போது பட விழாக்களில் சந்தித்து காதல் கொண்டனர். மகளின் ஆசைக்காக பிரபுவும் இந்த திருமணத்தில் சம்மதமே தெரிவித்தார். ஆனால் அவர் 500 கோடி வரதட்சணை கொடுத்ததாக கூறப்படுவது என்னவோ உண்மை இல்லை. அதை கேட்டால் பிரபுவே சிரிக்க தான் செய்வார்.
இந்த திருமணத்தினை பிரம்மாண்டமாக நடத்தவே பிரபு குடும்பம் முதலில் விரும்பியது. ஆனால் ஆதிக் தரப்பில் தான் இல்லை, சிம்பிள்ளாகவே நடத்தி விடலாம் எனக் கூறினார். அதற்கு காரணம் பெரிதாக கூறப்படவில்லை. இரண்டாம் கல்யாணம் கூட காரணமாக இருக்கலாம் எனக் குறிப்பிட்டு இருக்கிறார்.
Vijay antony:…
தமிழ் சினிமாவில்…
ரஹ்மான் மற்றும்…
நடிகர் சிம்பு…
நேற்று சோசியல்…