குட் பேட் அக்லி படத்துல இதை நோட் பண்ணீங்களா!.. விஜய்யை அசிங்கப்படுத்த ஆதிக் பார்த்த வேலை?..

நடிகர் விஜய் சினிமாவை விட்டு அரசியல் பக்கம் போன நிலையில், அவர் தனது முதல் மாநாட்டில் கேரியரின் உச்சத்தை விட்டுட்டு அரசியலுக்கு வருகிறேன் என பேசியிருப்பார். அதை வேண்டுமென்றே கலாய்க்கத்தான் ஆதிக் ரவிச்சந்திரன் குட் பேட் அக்லி படத்தில் பெரிய கேரியரை சுனில் எடுத்து வர அதை உடைத்து அஜித் குமார் துவம்சம் செய்வது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளதாக அஜித் ரசிகர்கள் தற்போது விஜய் ரசிகர்களை வெறுப்பேற்றி வருகின்றனர்.
2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்ட மன்ற தேர்தலில் விஜய் தேர்தலில் போட்டியிட உள்ள நிலையில், அஜித்தின் குட் பேட் அக்லி படத்துக்கு நெகட்டிவிட்டியை பரப்ப வேண்டாம் என மேலிடத்தில் இருந்து உத்தரவு வந்ததா? என்னவோ தெரியவில்லை. பல விஜய் ஐடிக்கள் அஜித் படத்துக்கு முட்டுக் கொடுத்து பாராட்டு பத்திரம் வாசித்தன.

விஜய்யின் லியோ, கோட் படங்களை எல்லாம் அஜித் ரசிகர்கள் அசிங்கப்படுத்தி டிசாஸ்டர் டேக் ஓட்டிய நிலையில், ஓட்டுக்காக இப்படியொரு தில்லாலங்கடி வேலையை விஜய் தரப்பு பார்த்ததாக கூறுகின்றனர்.
ஆனால், ஆதிக் ரவிச்சந்திரன் தீவிர அஜித் ரசிகர் என்பதால், படத்தில் விஜய்யை போட்டு பொளக்க வேண்டும் என்பதற்காகவே இப்படியொரு கேரியர் சீனை வைத்துள்ளார் என்றும் குட் பேட் அக்லி படம் கடந்த 4 நாட்களாக தமிழ்நாட்டிலேயே 100 கோடி வசூலை கடந்து விட்டது என்றும் உலகளவில் 150 கோடி வசூலை கடந்து டிராகன் படத்தின் லைஃப் டைமை காலி செய்து இந்த ஆண்டு அதிக வசூல் செய்த நம்பர் ஒன் படமாக மாறியுள்ளது என்கின்றனர்.