நாம சொல்றத விட அஜித் பெட்டரா ஒன்னு பண்ணுவார்!.. ஹைப் ஏத்தும் ஆதிக் ரவிச்சந்திரன்!..

#image_title
Good Bad Ugly: அஜித்தின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம்தான் குட் பேட் அக்லி. இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருக்கிறார். விடாமுயற்சி படம் அஜித் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத நிலையில் அதற்கு மாற்றாக இப்போது குட் பேட் அக்லி வரவிருக்கிறது. ஏனெனில், குட் பேட் அக்லி திரைப்படம் ஒரு பக்கா கேங்ஸ்டர் ஆக்ஷன் படமாக உருவாகியிருக்கிறது.
சமீபத்தில் இப்படத்தின் டீசர் வீடியோவும் வெளியாகி அஜித் ரசிகர்களுக்கு வைப் ஏற்றியுள்ளது. ஏனெனில், அஜித் ரசிகர்கள் அவரிடம் என்ன எதிர்பார்ப்பார்களோ அது எல்லாமே குட் பேட் அக்லியில் இருக்கிறது. ஒரு அப்பா அஜித் ரசிகராக படத்தை பார்த்து செதுக்கியிருக்கிறார் ஆதிக் ரவிச்சந்திரன்.

#image_title
மங்காத்தா படத்திற்கு பின் அஜித்துக்கு மாஸான காட்சிகள் குட் பேட் அக்லியில் இடம் பெற்றிருக்கிறது. டிரெய்லரில் வந்த ஒவ்வொரு காட்சிகளிலும் இதை பார்க்க முடிந்தது. எனவே, இப்படத்தை பார்க்க அஜித் ரசிகர்கள் மிகவும் ஆலுலுடன் காத்திருக்கிறார்கள். குட் பேட் அக்லி திரைப்படம் வருகிற ஏப்ரல் 10ம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது.
இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். இப்படத்தில் இடம் பெற்ற வைப் ஏற்றும் பாடல் ஒன்றும் நேற்று வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்நிலையில், பிரபல வார இதழுக்கு கொடுத்த பேட்டியில் ஆதிக் ரவிச்சந்திரன் பல முக்கிய தகவல்களையும் பகிர்ந்துகொண்டார்.

#image_title
அஜித் சார் எப்போதும் தன்னை ஒரு ஸ்டாராக நினைக்கவே மாட்டார். தன்னை ஒரு நடிகராகவே நினைப்பார். நாம் ஒன்று சொன்னால் அதை தாண்டி வேற என்ன செய்யலாம் என யோசிப்பார். அப்படி இருக்கும் போது இந்த படம் என்ன கேட்டதோ அதை ஒரு நடிகராக தனது கடமையை செய்திருக்கிறார். இந்த படத்திற்காக முழுக்க தன்னை ஒப்படைத்தார்’ என பேசியிருக்கிறார்.
மேலும், என்னுடைய முந்தைய படங்களை எடுத்துப் பார்த்தால் ‘அஜித் சார் படத்தை இயக்கும் தகுதி இருக்கான்னு யோசித்த போது எனக்கு இல்லையென்று தோன்றியது. ஆனால், அந்த தகுதியை வளர்த்துக்க ஆசைப்பட்டேன். ஆனால், அஜித் சார் அதை எப்படி ஜட்ஜ் பண்ணார்னு ஆச்சர்யமா இருக்கு. நிறைய புதுமுக இயக்குனர்களுக்கு நம்பிக்கை கொடுத்திருக்கிறார். இப்படி ஒரு பொறுப்பு கொடுக்கும்போது பொறுப்பு தானாக கூடும். அப்படி பொறுப்புடன் இந்த படத்தை எடுத்திருக்கிறேன்’ என சொல்லியிருக்கிறார்.