Good Bad Ugly: திரையுலகில் எதையும் பாசிட்டிவாக பார்ப்பவராகவும், தன்னம்பிக்கை அதிகம் உடையவராகவும் இருப்பவர் நடிகர் அஜித்குமார். அவரின் முதுகில் செய்யப்பட்ட அறுவை சிகிச்சைகள் வேறு ஒரு நடிகருக்கு செய்யப்பட்டிருந்தால் பல வருடங்களுக்கு முன்பே நடிப்பதை நிறுத்தியிருப்பார். ஆனால், அஜித்தோ பல வருடங்களாகவே முதுகு வலியை பொறுத்துக்க்கொண்டு நடித்து வருகிறார்.
ஒருபக்கம் சினிமாவில் நடிப்பது மட்டுமில்லாமல் கார் ரேஸ்களிலும் கலந்து கொண்டு வருகிறார். இத்தனைக்கும் கார் ரேஸ் பயிற்சியின் போதும், போட்டிகளின் போதும் விபத்து ஏற்படும். அதையெல்லாம் மீறியே அஜித் தொடர்ந்து கார் ரேஸில் கலந்துகொண்டு வருகிறார். ஏற்கனவே துபாயில் நடந்த கார் ரேஸில் அஜித்தின் டீம் 3வது பரிசை பெற்றது.

இப்போது அஜித்தின் டீம் ஐரோப்பிய நாட்டில் நடைபெற்று வரும் போட்டிகளில் கலந்துகொண்டு வருகிறது. இந்த வருடம் அக்டோபர் மாதம் வரை அவருக்கு போட்டி இருக்கிறது. அதன்பின்னரே அடுத்த படத்தில் நடிக்க திட்டமிட்டிருக்கிறார். சினிமா உலகில் தோல்வியை கண்டு மனம் தளராத நடிகர் அஜித். சிவாவின் இயக்கத்தில் நடித்த விவேகம் படம் ஓடவில்லை.
பொதுவாக ஒரு தோல்விப்படம் கொடுத்த இயக்குனரை ஹீரோக்களை கழட்டிவிட்டு விடுவார்கள். ஆனால், அதே சிவாவின் இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்து ஹிட் கொடுத்தார் அஜித். இதுதான் அவரின் குணம். நேர்கொண்ட பார்வை படத்தில் தன்னுடன் நடித்த ஆதிக்கிடம் ‘உன்னிடம் ஒரு எனர்ஜி இருக்கு.. நாம சேர்ந்து படம் பண்ணுவோம்’ என சொன்ன ஒரு வார்த்தைக்காக அவரின் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடித்திருக்கிறார் அஜித்.

நம்பிக்கையோடு திறமையும் உடையவர்களை ஊக்குவிப்பதை அஜித் தொடர்ந்து செய்து வருகிறார். விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு 80 சதவீதம் முடிந்த நிலையில் குட் பேட் அக்லி படத்தில் நடித்தார் அஜித். இப்போது இந்த படம் முடிவடைந்து வருகிற ஏப்ரல் 10ம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், பேட்டில் ஒன்றில் பேசிய ஆதிக் ரவிச்சந்திரன் ‘அஜித் சார் மாதிரி வில் பவர் இருக்கும் ஒருவரை பார்க்கவே முடியாது. அவரின் பகுதியை 72 நாட்களில் முடித்து கொடுத்தார். விடாமுயற்சி ஷூட்டிங் போயிட்டு அப்படியே இங்க வருவார். பகலில் அந்த படத்தில் நடித்துவிட்டு இரவு முழுவதும் குட் பேட் அக்லி படத்தில் நடிப்பார். ரன்னிங் டைமில்தான் தூங்குவார். மே 1ம் தேதி பிறந்தவர் என்பது அவருக்கு மிகவும் பொருந்தும். காட்சிகள் நன்றாக வரும்போது ‘சூப்பர்.. வெரி ஹேப்பி’ என சொல்வார். ‘நன்றி கடவுளே’ என மனதிற்குள் சொல்லிக்கொண்டு இன்னும் வேகமா ஓட ஆரம்பிச்சிடுவேன்’ என ஃபீல் பண்ணி பேசியிருக்கிறார்.