Connect with us

Cinema News

ஆடு ஜீவிதம் எதிர்பார்த்த அளவுக்கு கல்லா கட்டியதா?.. முதல் நாள் வசூல் எத்தனை கோடி தெரியுமா?

பிளஸ்சி இயக்கத்தில் பிருத்விராஜ் சுகுமாரன், அமலா பால்,  ஜிம்மி ஜீன் லூயிஸ், கே.ஆர். கோகுல் உள்ளிட்ட பலர் நடிப்பில் நேற்று வெளியான ஆடு ஜீவிதம் திரைப்படம் விமர்சன ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. அதே அளவுக்கு அந்த படத்தின் வசூல் வந்ததா? என்பது குறித்த கேள்வி தான் தற்போது சமூக வலைதளத்தில் அதிகளவில் எழுந்துள்ளது.

தனுஷ் நடிப்பில் வெளியான மரியான் படத்தையே இன்னொரு முறை பார்க்க வேண்டுமா? என நெட்டிசன்கள் இந்த படத்தை கலாய்த்தாலும், படத்தை பார்த்தவர்களுக்கு மரியான் படத்தை விட இந்த படம் எந்தளவுக்கு வேறுபட்டு நிற்கிறது என்பது புரியும்.

இதையும் படிங்க: வடிவேலு பேசிய பஞ்சு! ரஜினி பேசுற அளவுக்கு famous ஆச்சு.. என்ன டையலாக் தெரியுமா?

கேரளாவில் முதல் நாளில் அதிகபட்சமாக 6 கோடி ரூபாய் வரை ஆடு ஜீவிதம் திரைப்படம் வசூல் ஈட்டியிருக்கிறது. மஞ்சுமெல் பாய்ஸ் முதல் நாளில் அங்கே 3.30 கோடி வசூல் தான் ஈட்டியது குறிப்பிடத்தக்கது.

மோகன்லால் நடித்து இந்த ஆண்டு வெளியான மலைக்கோட்டை வாலிபன் தான் முதல் நாளில் கேரளாவில் 7.5 கோடி வசூல் ஈட்டியது. ஆனால், மஞ்சுமெல் பாய்ஸ் ரசிகர்களின் பாராட்டு மழையில் அடுத்தடுத்த நாட்களில் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தி 200 கோடி கிளப்பில் இணைந்தது. அதே சமயம் மோகன்லால் படத்துக்கு முதல் நாளே நெகட்டிவ் விமர்சனங்கள் குவிந்த நிலையில், அந்த படத்தின் வசூல் பாதிக்கப்பட்டது.

இதையும் படிங்க: நல்லா தளதளன்னு வளர்ந்திருக்க செல்லம்!.. விஸ்வாசம் நடிகையை கொஞ்சம் ரசிகர்கள்…

ஆடு ஜீவிதம் படத்துக்கு கேரளாவில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ள நிலையில், பான் இந்தியா படமாக வெளியான இந்த படத்துக்கு இந்தியா முழுவதுமே ஒட்டுமொத்தமாக 7.5 முதல் 8 கோடி தான் வசூல் வந்திருக்கிறது.

கேரளா வசூலை கழித்து விட்டுப் பார்த்தால் வெறும் 2 கோடி தான். தமிழ்நாட்டிலும் முதல் நாளில் பெரிதாக ஓப்பனிங் இல்லை. மேலும், மரியான் போல இருக்கு என குவியும் விமர்சனங்களால் இங்கே மஞ்சுமெல் பாய்ஸ் வசூல் செய்தது போல 50 கோடி வசூல் பிருத்விராஜ் படத்துக்கு சாத்தியம் ஆகுமா? என்பது சந்தேகம் தான்.  கேரளாவில் மிகப்பெரிய வெற்றியை ஆடு ஜீவிதம் பெற்றாலே பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடிக்கும் என்பது உறுதி எனக் கூறுகின்றனர்.

 

google news
Continue Reading

More in Cinema News

To Top