Categories: Cinema History latest news

நீங்க இழுப்பீங்கனு தெரியும்… அதுக்குனு ஒரு காட்சிக்கு 26 நாளா? ஆடுகளம் படத்தில் நடந்த சம்பவம்!..

2011-ல் வெளியான ஆடுகளம் படம் தனுஷ் – வெற்றிமாறன் என இருவரின் சினிமா பயணத்திலுமே மிக மிக முக்கியமான படம். சேவல் சண்டை பின்னணியில் அழுத்தமான திரைக்கதையில் உருவான இந்தப் படம் வசூல்ரீதியாகவும் சரி; விமர்சனரீதியாகவும் சரி மிகப்பெரிய வெற்றிபெற்றது.

பொல்லாதவன் வெற்றியைத் தொடர்ந்து தயாரிப்பாளர் கதிரேசன் – இயக்குநர் வெற்றிமாறன் -நடிகர் தனுஷ் – இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் கூட்டணி இரண்டாவதாக இணைய முடிவெடுத்தது. இதையடுத்து, மதுரை சென்ற வெற்றிமாறன் கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் அங்கு தங்கியிருந்து மக்களின் மொழி, நடை, உடை, பாவனை ஆகியவற்றைப் புரிந்துகொண்டு ஓராண்டில் எழுதிய திரைக்கதைதான் ஆடுகளம் படம்.

இதையும் படிங்க: பிரசாந்தின் திடீர் சரிவுக்கு காரணம் இதுதானாம்… உண்மையை உடைக்கும் பிரபலம்..!

குறிப்பாக திரிஷா நடிப்பில் ஒரு சில நாட்கள் படப்பிடிப்பு நடந்தும் கால்ஷூட் பிரச்சனையால் அவரால் தொடர்ந்து நடிக்க முடியாமல் போனது. 2011 தைப்பொங்கலை ஒட்டி வெளியான படம் மிகப்பெரிய வெற்றிபெற்றதோடு சிறந்த படம், இயக்குநர், நடிகர் என 6 தேசிய விருதுகளையும் வென்றது. குறிப்பாக படத்தின் இடைவேளை காட்சிகள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன.

அந்த சேவல் சண்டை மைதானம் தொடர்பான காட்சிகள் மட்டுமே 136 பக்கங்களுக்கு எழுதியிருந்தாராம் வெற்றிமாறன். `அயூப் நினைவுக் கோப்பை மகாநாட்டுக்கு உங்களை வரவேற்கிறோம்’ என்ற அறிவிப்பு தொடங்கி தனுஷ் வெளியேறுவது வரை கிட்டத்தட்ட 72 நிமிடம் கொண்டதாக அந்தக் காட்சிகள் எடுக்கப்பட்டிந்ததாம்.

இதையும் படிங்க: அவ நாயா பிறக்கட்டும்!.. நாகசைத்தன்யா 2வது மனைவி போட்ட பதிவு!.. யார சொல்றார்னு தெரியலயே!…

Published by
Akhilan