Categories: latest news

முத்த மழையில் நனையவிட்ட ஆலியாபட்-ரன்பீர் கபூர்…! இனிதே நடந்தது திருமணம்..வைரலாகும் புகைப்படம்…

பாலிவுட் சினிமாவில் முன்னனி நட்சத்திரங்களாக வலம் வருபவர்கள் ஆலியா பட் மற்றும் ரன்பீர் கபூர். இருவரும் நீண்ட நாள்களாக காதலித்து வந்த நிலையில் கடந்த 2020 ல் திருமணம் என முடிவு செய்யப்பட்டு பின்னர் கொரானா பெருந்தொற்று காரணமாக இவர்களின் திருமணம் தள்ளிப்போய் கொண்டே இருந்தது.

ரன்பீர் கபூர் ஏற்கெனவே தீபிகா படுகோனேவுடன் காதலில் விழுந்து இருவருக்குமிடையில் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்தனர். ஏராளமான நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டு பின்னர் ஆலியா பட்டை கரம் பிடித்துள்ளார்.

 

மேலும் ஆலியா தனது இன்ஸ்டாவில் நாங்கள் இந்த 5 வருடங்களாக செலவிட்ட எங்களுக்கு பிடித்த இடமான எங்கள் வீட்டு பால்கனியில் குடும்பம் மற்றும் நண்பர்கள் சூழ இந்த திருமணம் நடப்பது எங்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது என கூறியுள்ளார்.

மேலும் எங்களுக்கு பின்னாடி நிறைய நியாபகங்கள் இருக்கின்றது.இன்னும் சுமந்து போக எங்களால் காத்திருக்க முடியாது, அந்த நியாபகங்களில் அன்பு, அக்கறை, சினிமா சம்பந்தப்பட்ட நிகழ்வுகள் என சொல்லிக்கொண்டே போகலாம். எங்களுக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றி என பதிவிட்டுள்ளார்.

Published by
Rohini