
Cinema News
ஒரு வழியா பவானிக்கு தாலி கட்டிய அமீர்.. வெளியாகி புயலை கிளப்பிய வீடியோ…
கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 5-வது நிகழ்ச்சியின் மிகவும் பிரபலமான போட்டியாளர்களில் ஒருவரான நடிகை பாவனி, அதில் 2-வது ரன்னர்-அப் இடத்தைப் பிடித்தார். இந்த நிகழ்ச்சியில் அவருடன் இருந்த நடன இயக்குனர் அமீர் அவருடன் நெருக்கமாகி, அவர்கள் இருவரும் காதல் செய்து வருவதாக ஒரு வதந்தி பரவியது.
பிக் பாஸ் சீசன் முடிந்த பிறகும் இருவரின் ஜோடி தொடர்ந்தது, இருவரும் இப்போது பிபி ஜோடிகள் என்ற ரியாலிட்டி ஷோவில் பங்கேற்று கலக்கி வருகிறார்கள். தற்போது, அவர்கள் திருமணம் செய்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இது குறித்து சிறுது நேரத்தில் தெரிய வந்த செய்தி என்னவனென்றால், பிபி ஜோடிகளின் வரவிருக்கும் எபிசோடில் அவர்களின் நடிப்பின் ஒரு பகுதியாக இந்த திருமணம் நடந்தது என்பது தெரியவந்தது.
இதையும் படிங்களேன்- எனக்கு அந்த படத்தை ரீமேக் செய்ய ஆசை.. அதில் சூர்யா – கார்த்தி.?! லோகேஷின் வித்தியாசமான விருப்பம்.!
இதற்கு முன்னர் பாவனி, தெலுங்கு நடிகர் பிரதீப் குமாருடன் கடந்த 2016ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டாராம். ஆனால், காரணம் இல்லாமல் பிரதீப் குமார் திடீரென தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து, பிக் பாஸ் நிகழ்வின் ஒரு டாஸ்க்கில் தனது கணவரின் இழப்பால் எவ்வளவு கஷ்டங்களை அவர் அனுபவித்தார் என்பதை பகிர்ந்துகொண்டார் என்பது குறிப்படத்தக்கது.