எம்.ஜி.ஆருக்கு பிடிக்காத செயலை செய்ததால் பட வாய்ப்புகளை இழந்த கதாசிரியர்… அடப்பாவமே!!

Published on: January 1, 2023
MGR and Aaroor Das
---Advertisement---

தமிழின் பழம்பெரும் கதாசிரியராக திகழ்ந்த ஆரூர் தாஸ் கடந்த நவம்பர் மாதம் தனது 91 ஆவது வயதில் காலமானார். இவரது மரணத்திற்கு தமிழ் திரையுலகமே அஞ்சலி செலுத்தியது.

40 வருடங்களுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் முன்னணி கதாசிரியராகவும் வசனகர்த்தாவாகவும் கோலோச்சிய ஆரூர் தாஸ், கிட்டத்தட்ட 1000க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் கதாசிரியராகவும் வசனக்கர்த்தாவாகவும் பணியாற்றியிருக்கிறார்.

Aaroor Das
Aaroor Das

சிவாஜி கணேசன் நடித்த “பாசமலர்”, “பார்த்தால் பசி தீறும்”, “படித்தால் மட்டும் போதுமா”, “அன்னை இல்லம்” போன்ற பல திரைப்படங்களுக்கு ஆரூர் தாஸ் கதாசிரியராகவும் வசனகர்த்தாவாகவும் பணியாற்றியிருக்கிறார். அதே போல் எம்.ஜி.ஆர் நடித்த “தாய் சொல்லை தட்டாதே”, “குடும்பத் தலைவன்”, “தாயை காத்த தனையன்”, “அன்பே வா” போன்ற பல திரைப்படங்களிலும் பணியாற்றியிருக்கிறார்.

இந்த நிலையில் எம்.ஜி.ஆருக்கு உடன்பாடு இல்லாத ஒரு செயலை செய்ததால் ஆரூர் தாஸுக்கு பட வாய்ப்புகள் போனது குறித்த ஒரு சம்பவத்தை தற்போது பார்க்கலாம்.

Penn endral Penn
Penn endral Penn

1967 ஆம் ஆண்டு ஜெமினி கணேசன், சரோஜா தேவி, விஜயகுமாரி ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “பெண் என்றால் பெண்”. இத்திரைப்படத்தை ஆரூர் தாஸ் கதை எழுதி இயக்கினார். ஆரூர் தாஸ் இயக்கிய ஒரே திரைப்படம் இதுதான்.

இதையும் படிங்க: இந்த எம்.ஜி.ஆர் படத்துக்கு இவ்வளவு தடங்கல் வந்ததா?? என்னப்பா சொல்றீங்க??

MGR
MGR

“பெண் என்றால் பெண்” திரைப்படத்தை ஆரூர் தாஸ் இயக்குவதில் எம்.ஜி.ஆருக்கு உடன்பாடே இல்லையாம். ஆனால் அதை எல்லாம் மீறித்தான் அவர் அத்திரைப்படத்தை இயக்கினாராம். எனினும் “பெண் என்றால் பெண்” திரைப்படம் சரியாக ஓடவில்லையாம். இத்திரைப்படத்தின் தோல்விக்கு பிறகு எம்.ஜி.ஆர் படங்களில் ஆரூர்தாஸ் பணியாற்றக்கூடிய சூழல் ஏற்படவே இல்லையாம். இத்தகவலை சித்ரா லட்சுமணன் தனது வீடியோ ஒன்றில் பகிர்ந்துள்ளார்.