நயன்தாராதான் வேணும்.. அடம் பிடித்த ஆர்யா.. போட்டுக்கொடுத்த இயக்குநர்..
நடிகர் ஆர்யா சார்பட்டா பரம்பரை, கேப்டன், டெடி, ராஜா ராணி, பாஸ் என்கிற பாஸ்கரன், அவன் இவன், நான் கடவுள் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். வித்யாசமான படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
ராஜேஷ் இயக்கத்தில் ஆர்யா, நயன்தாரா, சந்தானம் உள்ளிட்டோர் நடிப்பில் 2010ம் ஆண்டு வெளியான திரைப்படம் பாஸ் என்கிற பாஸ்கரன். இந்த படத்தின் காமெடி காட்சிகளை இன்று வரை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். சந்தானம், ஆர்யா காம்பினேஷன் செம ஹிட்டானது.
இதையும் படிங்க- ‘டிடி ரிட்டர்ன்ஸி’ன் வெற்றி! சந்தானத்தால் ஆர்யாவுக்கு வந்த சிக்கல்.. எதிர்பார்த்ததுதான்
இந்த படத்தின் இயக்குநர் ராஜேஷ் ஒரு கல் ஒரு கண்ணாடி, சிவா மனசுல சக்தி, ஆல் இன் ஆல் அழகு ராஜா, கடவுள் இருக்கான் குமாரு, மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில், நயன்தாரா தான் ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்று ஆர்யா பல விஷயங்களை செய்தார் என்று தெரிவித்துள்ளார்.
பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தின் கதையை கேட்டதும் ஆர்யாவுக்கு பிடித்துவிட்டது. அதன் பிறகு ஹீரோயினாக யாரை போடலாம் என்று ஆலோசனை நடத்திய போது, நயன்தாராவை போடலாம் என்று ஆர்யா தான் கூறினார். ஆனால் அந்த நேரத்தில் அவர் சினிமாவை விட்டு விலகியிருந்தார்.
பெரிதாக படங்களில் நடிக்காமல் இருந்தார். எனவே, நாங்கள் யோசித்தோம். அவர் நடிக்க மறுத்துவிடுவார் என்று நினைத்தோம். ஆனால் ஆர்யா தான் நயன்தாராவிற்கு செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார்.
நயன்தாராவை ஹீரோயினாக நடிக்க வைக்க வேண்டும் என்று பல முயற்சிகளை மேற்கொண்டு, நடிக்க வைத்தார். ஆர்யாவால் தான் பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் நயன்தாரா நடித்தார் என்று இயக்குநர் ராஜேஷ் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
அந்த படம் ஹிட்டான பிறகு அடுத்தடுத்து நயன்தாரா பல படங்களில் நடிக்கத்தொடங்கினார் நயன்தாரா. அதன் பிறகு மீண்டும் 2013ம் ஆண்டு ராஜா ராணி படத்தில் ஆர்யாவும், நயன்தாராவும் இணைந்து நடித்துள்ளனர்.
இதையும் படிங்க- விஜயை நம்பி விழிபிதுங்கி நிற்கும் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம்! தளபதியின் கணக்கே வேற..