ஆசை திரைப்படம் முதலில் நடிக்க இருந்தது அஜித் இல்லையாம்!… மிஸ் செய்த பிரபலம்…

Published On: April 30, 2024
| Posted By : Akhilan

Aasai: நடிகர் அஜித்தின் நடிப்பில் வெற்றிபடமாக இருக்கும் ஆசை படத்தில் முதலில் அவருக்கு முன்னால் வேறு ஒரு நடிகர் தான் ஒப்பந்தமானாராம். ஆனால் சில காரணங்களால் அந்த படம் அஜித் கைவசமான ஆச்சரிய தகவல்.

இயக்குனர் வசந்த் ஃபேமிலி திரில்லர் கதையை இயக்க முடிவெடுக்கிறார். ஆனால் வில்லன் மற்ற படங்களை போல இல்லாமல் கொஞ்சம் முரட்டுத்தனமாக வேண்டும் என முடிவெடுக்கிறார். பூவெல்லாம் கேட்டுப்பார், தேவா மற்றும் கண்ணே என பல டைட்டில்களை படக்குழு ஆராய்ந்தது.

இதையும் படிங்க: அட்ஜெட்ஸ் பண்றதுல என்ன தப்பு?.. பேட்டி கொடுத்து வாய்ப்புகளை அள்ளிய பூனைக்கண் புவனேஸ்வரி!..

ஆனால் கடைசியில் ஆசை டைட்டிலை வசந்த் ஓகே செய்தார். இது ஹீரோ மற்றும் வில்லன் இருவருக்கும் பொருந்துவதாக இருந்தது. இப்படத்திற்கான இசையை தேவா இசையமைத்து இருந்தார். வாலி மற்றும் வைரமுத்து பாடலுக்கான வரிகளை எழுதி இருந்தனர். இதை தொடர்ந்து 1995ம் ஆண்டு வெளியான இப்படம் மிகப்பெரிய அளவில் வரவேற்புகளை பெற்றது. பெரிய அளவில் வசூல் செய்தது.

இப்படத்திற்கு முதலில் நடிகர் அஜித் வசந்தின் தேர்வு கிடையாதாம். அந்த கதைக்கு அரவிந்த்சாமியை நடிக்க வைக்கலாம் என முடிவு செய்திருந்தாராம். ஆனால், அந்த சமயத்தில் அவரது தேதிகள் கிடைக்காததால் அச்சமயத்தில் அமராவதி  படத்தில் நடித்திருந்த பெண்களின் மனம் கவர்ந்த அஜித்தை நடிக்க வைக்க யோசனை வந்ததாம். நேரில் கதை சொன்னதும் அஜித்துக்கும் பிடித்து விட்டதாம். அந்த ஷூட்டிங்கிற்கு அஜித் அதிகம் பைக்கில் தான் வந்து போவாராம்.                

இதையும் படிங்க: திட்டி பேசிய ரஜினி!.. அமைதியாக இருந்த தயாரிப்பாளர்!.. ஜெயலலிதாவுக்கு வந்த கோபம்!..