விஜய் ஆண்டனிக்கே ஆப்பு வைத்த ஆத்மிகா... நீ நல்லா வருவ செல்லம்!..
தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் விஜய் ஆண்டனி. முதலில் இசையமைப்பாளராக அறிமுகமான விஜய் ஆண்டனி இளசுகளின் மனதை தன் இசையால் துள்ளலாட வைத்தார். அவரது இசையில் பல்வேறு பாடல்கள் இன்றும் நம் மனதை ஆட வைக்கின்றது.
இன்றும் பல பேர் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியை நாங்கள் மிஸ் பண்றோம் என்றுதான் புலம்பி வருகின்றனர். ஆனால் நடிகராக இவர் நடித்த பெரும்பாலான படங்கள் மக்கள் மனதை கொள்ளை கொண்டன.
குறிப்பாக நான், பிச்சைக்காரன் போன்ற படங்கள் விஜய் ஆண்டனி மீது ஒரு நல்ல அபிப்ராயத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் விஜய் ஆண்டனி சத்தமே இல்லாமல் ஹிட்லர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ஆத்மிகா நடிக்க இருப்பதாக முதலில் செய்திகள் வெளிவந்தது.
அதற்காக ஆத்மிகாவை தொடர்பு கொண்டு அவருக்கான அட்வான்ஸ் தொகையும் காஸ்ட்யூம்கள் 2 லட்சத்திற்கும் தயார் செய்து வைத்தும் சரியாக படப்பிடிப்பு சமயத்தில் என் அம்மாவுக்கு உடல் நிலை சரியில்லை என்றும் என்னால் வரமுடியாது என்று சொல்லி படப்பிடிப்புக்கு வரவில்லையாம்.
இதனால் கடும் அப்செட்டில் இருந்த படக்குழு அதே தேதியில் வேறொரு நடிகையை வைத்து படப்பிடிப்பை நடத்தியிருக்கின்றனர். ஆனால் ஆத்மிகா அதே தேதியில் வேறொரு படப்பிடிப்பிற்காக அவரது அம்மாவை அழைத்துக் கொண்டு சென்று விட்டாராம். இதை அறிந்த ஹிட்லர் படக்குழு ஆத்மிகா மீது கடும் அதிர்ப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. ஆத்மிகாவும் விஜய் ஆண்டனியும் ஏற்கெனவே கோடியில் ஒருவன் என்ற படத்தில் இணைந்து நடித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.