ஆயிரத்தில் ஒருவன் 2 சோலி முடிஞ்சிடுச்சு- ஷாக் கொடுத்த மூத்த பத்திரிக்கையாளர்… அடக்கொடுமையே!

by Arun Prasad |
AO 2
X

AO 2

கார்த்தி, ரீமா சென், ஆண்ட்ரியா ஆகியோரின் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த “ஆயிரத்தில் ஒருவன்” திரைப்படம் வெளிவந்த சமயத்தில் வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும் பல காலத்திற்கு பிறகு சமூக வலைத்தளத்தில் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

மீண்டும் மீண்டும் இத்திரைப்படத்தை குறித்து யாராவது ஒரு ரசிகர், பேசிக்கொண்டேதான் இருக்கிறார்கள். இவ்வாறு காலம் தாண்டி கொண்டாடப்படும் திரைப்படமாக இத்திரைப்படம் அமைந்துள்ளது.

Aayirathil Oruvan

Aayirathil Oruvan

இதனை தொடர்ந்து இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்தான பேச்சுக்கள் அடிபடத் தொடங்கின. அதன் பின் கடந்த 2020 ஆம் ஆண்டு “ஆயிரத்தில் ஒருவன் 2” திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்தது. இத்திரைப்படத்தில் தனுஷ் நடிப்பதாகவும் இத்திரைப்படம் வருகிற 2024 ஆம் ஆண்டு வெளிவரும் எனவும் அறிவிக்கப்பட்டது.

தற்போது 2023 ஆம் ஆண்டின் மத்தியில் இருக்கிறோம். ஆனாலும் “ஆயிரத்தில் ஒருவன் 2” திரைப்படம் குறித்த எந்த அப்டேட்டும் வெளிவரவில்லை. இது குறித்து செல்வராகவனிடம் பல பேட்டிகளில் கேட்கப்பட்டபோது “நிச்சயம் அப்டேட் வரும்” என கூறிவந்தார். ஆனால் அபேட்டுக்காக காத்து காத்து ரசிகர்கள் நொந்துப்போனார்கள்.

Dhanush and Selvaraghavan

Dhanush and Selvaraghavan

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட மூத்த பத்திரிக்கையாளர் அந்தணன், ஒரு பகீர் தகவலை கூறி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். அதாவது “ஆயிரத்தில் ஒருவன் 2 நிச்சயம் வராது. ஒரு தோல்வி திரைப்படத்தை இரண்டாம் பாகமாக எடுக்கமாட்டார்கள். அப்படியே இருந்தாலும் ஆயிரத்தில் ஒருவன் 2 என்ற பெயரில் வேறு ஒரு கதையை படமாக எடுத்தால் வெற்றி பெற வாய்ப்பு உண்டு.

Anthanan

Anthanan

ஆனால் ஆயிரத்தில் ஒருவன் கதையின் தொடர்ச்சியாக எடுத்தால் நிச்சயம் படம் வெற்றிபெற வாய்ப்புகள் இல்லை” என கூறியுள்ளார். இந்த செய்தி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. எனினும் இது குறித்து செல்வராகவன் என்ன சொல்லப்போகிறார் என்பதைத்தான் நாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

இதையும் படிங்க: நான் சொல்ற மாதிரிதான் க்ளைமாக்ஸ் இருக்கணும்… இயக்குனரிடம் பிரச்சனை செய்த கமல்ஹாசன்!..

Next Story