நடிகர் ஆர்யா கலந்து கொண்ட டிவி நிகழ்ச்சி எங்க வீட்டு மாப்பிள்ளை. அதாவது ஆர்யாவை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என ஆசைப்பட்ட பெண்கள் அதில் கலந்து கொண்டார்கள்.

பல கட்ட போட்டிகள் அதில் இருக்கும். அதில், ஆர்யாவின் மனதை கவர்ந்து அவரை காதலில் விழ வைக்க வேண்டும். ஆர்யா யாரை விரும்புகிறாரோ அவரை அவர் தேர்ந்தெடுத்து திருமணம் செய்து கொள்வார் என அறிவிக்கப்பட்டது.

இந்த போட்டியில் கலந்து கொண்ட பெண்களில் ஒருவர்தான் அபர்ணதி. தமிழ் பெண்ணான இவர் ஆர்யாவை உருகி உருகி காதலித்து அவரை இம்ப்ரஸ் செய்ய முயன்றார். ஆனால், நிகழ்ச்சியின் இறுதியில் ஆர்யாவை யாரையுமே திருமணம் செய்யவில்லை.

இந்த நிகழ்ச்சி மூலம் பிரபலமான அபர்ணதிக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்புகள் வந்தது. தேன், ஜெயில் ஆகிய படங்களில் நடித்தார். மேலும், சக நடிகைகள் போல விதவிதமான உடைகளில் அழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.

இந்நிலையில், தற்போது கவர்ச்சி உடைகளையும் அணிந்து ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளார். அவரின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

