காதல் தேசம் அப்பாஸின் தற்போதைய நிலை... மருத்துவமனையில் மூக்கில் ட்யூப்புடன் பரிதாப கோலத்தில் வெளியான புகைப்படம்...
காதல் தேசம் திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமான அப்பாஸ் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
காதல் தேசம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்குள் ஹீரோவாக எண்ட்ரி கொடுத்தவர் அப்பாஸ். அமுல்பேபி லுக்கிற்கே அவருக்கு ஏகப்பட்ட பெண் ரசிகைகள் இருந்தனர். முதல் படமே ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் அமைந்தது இவருக்கு மிகப்பெரிய ப்ளஸாக அமைந்தது.
தொடர்ச்சியாக, காதல் வைரஸ், இனி எல்லாம் சுகமே, கண்ணெழுதி தொட்டும் பொட்டு படையப்பா, மலபார் போலீஸ், விண்ணுக்கும் மண்ணுக்கும், ஆனந்தம், அழகிய தீயே முதலிய திரைப்படங்களில் நடித்துள்ளார் அப்பாஸ். இருந்தும், தமிழ் சினிமாவில் ஒரு இடத்தினை அப்பாஸால் பிடிக்க முடியவில்லை.
இதனால் சினிமாவில் இருந்து மொத்தமாக ஒதுங்கி வெளிநாட்டில் குடும்பத்துடன் செட்டில் ஆகிவிட்டார். அங்கே சாதாரணமாக வேலை செய்து வரும் அப்பாஸ், சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்துவருபவர். கடந்த ஆகஸ்ட் மாதமே தனது கால் முட்டியில் ஏற்பட்ட காயத்தினால் அறுவை சிகிச்சை ஒன்று செய்ய இருப்பதாக அறிவித்திருந்தார்.
இதை தொடர்ந்து அவருக்கு சிகிச்சை நல்ல முறையில் முடிந்துவிட்டதை தனது பேஸ்புக்கில் மருத்துவமனை பெட்டில் இருக்கும் புகைப்படத்துடன் வெளியிட்டு இருக்கிறார். ரசிகர்கள் அவருக்கு ஆறுதலையும் கூறி வருகிறார்கள்.