Cinema News
நியூஸிலாந்தில் பாத்ரூம் கழுவினேன்… சாக்லேட் பாய் அப்பாஸ்க்கு இப்படி ஒரு நிலைமையா!
1990களிலும் 2000களிலும் தமிழ் சினிமாவின் சாக்லேட் பாயாக திகழ்ந்தவர் அப்பாஸ். அக்காலகட்டத்தில் இளம் பெண்களின் கனவுக்கண்ணனாகவே வலம் வந்தார். எனினும் காலப்போக்கில் அவரது மார்க்கெட் சரிந்துகொண்டே வந்தது. அதன் பின் விளம்பரப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். குறிப்பாக ஹார்பிக் விளம்பரத்தில் நடித்தபோது பலரும் அவரை கேலி செய்தனர்.
இந்த நிலையில் அப்பாஸ் தற்போது சினிமாவை விட்டே விலகிவிட்டார். இப்போது அவர் தனது குடும்பத்துடன் நியூஸிலாந்தில் செட்டில் ஆகிவிட்டார். இந்த நிலையில் பல பேட்டிகளில் அவருக்கு நேர்ந்த துரோகங்களை குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
அதாவது “காதல் தேசம்” திரைப்படத்தை தொடர்ந்து கிட்டத்தட்ட 18 திரைப்படங்களில் ஒப்பந்தமானாராம் அப்பாஸ். அதே போல் அந்த 18 திரைப்படங்களுக்கான அட்வான்ஸையும் பெற்றிருக்கிறார். அதில் 2 திரைப்படங்கள் சரியாக ஓடவில்லை என்ற காரணத்தால் 16 திரைப்படங்களின் தயாரிப்பாளர்களும் அவரை வைத்து படம் தயாரிக்கும் முடிவை கைவிட்டுவிட்டார்களாம். அதன் பின் அந்த 16 திரைப்படங்களுக்கான அட்வான்ஸையும் திரும்ப கொடுத்திருக்கிறார்.
அதே போல் அந்த இடைப்பட்ட காலகட்டத்தில் ஷங்கரின் “ஜீன்ஸ்”, ஃபாசிலின் “காதலுக்கு மரியாதை” ஆகிய படங்களில் ஹீரோவாக நடிப்பதற்கான வாய்ப்பு வந்ததாம். ஆனால் அவரது மேனேஜர் “அப்பாஸ் பல படங்களில் பிசியாக இருக்கிறார்” என்று கூறி அந்த வாய்ப்புகளை எல்லாம் நிராகரித்து விட்டாராம். தன்னுடைய மேனேஜரே தனக்கு துரோகம் செய்ததாகவும் கூறியிருக்கிறார்.
அதனை தொடர்ந்து அவரது கேரியர் ஒரு காலகட்டத்தில் சரியத் தொடங்கியது. எனினும் நடிகர்களை ஒருங்கிணைத்து செலப்ரிட்டி கிரிக்கெட் நிகழ்ச்சியை நடத்தினாராம். ஆனால் ஒரு முக்கிய நடிகர் அவரின் முதுகில் குத்திவிட்டாராம். ஆதலால் அந்த நிகழ்ச்சியை நடத்தியது அப்பாஸ்தான் என்ற தகவல் வெளியே தெரியாமல் போய்விட்டதாம். இந்த அசிங்கமான அரசியலால் மனம் நொந்துப்போனதாக அப்பேட்டியில் கூறியிருக்கிறார்.
அதன் பின் சினிமாவே வேண்டாம் என்று முடிவெடுத்த அப்பாஸ், சென்னையில் உள்ள தனது சொத்துக்களை எல்லாம் விற்றுவிட்டு தனது குடும்பத்துடன் நியூஸிலாந்தில் செட்டில் ஆகியிருக்கிறார். நியூஸிலாந்துக்கு சென்ற புதிதில் பெட்ரோல் பல்க்கில் வேலை பார்த்திருக்கிறார். மேலும் அங்கே உள்ள கழிவறைகளையும் சுத்தம் செய்திருக்கிறார்.
அதே போல் கார் மெக்கானிக்காகவும் வேலை பார்த்தாராம். எனினும் இந்த வேலைகளை எல்லாம் தான் மகிழ்ச்சியுடன் செய்ததாகவும் இந்த நாட்டில் தன்னிடம் யாரும் ஹார்பிக் விளம்பரத்தில் நடித்ததற்காக கேலி செய்யமாட்டார்கள் என்றும் அப்பேட்டியில் கூறியிருக்கிறாராம்.
இதையும் படிங்க: என்.எஸ்.கே சொன்னதை கேட்டு அரண்டு போன ஜெமினி ஸ்டூடியோ… கடைசியில் என்ன நடந்தது தெரியுமா?..