மார்க் ஆண்டனி நடிகையின் மெஹந்தி ஃபங்ஷன்!.. கையில் மருதாணியுடன் அபிநயா என்ன அழகா இருக்காரு!

இயக்குநர் சமுத்திரகனி இயக்கத்தில் நாடோடிகள் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை அபிநயா சமீபத்தில் அளித்திருந்த பேட்டியில் தான் 15 வருடமாக ஒருவரை காதலித்து வருவதாக கூறியிருந்தார். இந்நிலையில் அவர்கள் இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு தற்போது மெஹந்தி ஃபங்ஷன் வரை நடைபெற்று விட்டது.
காது கேட்காத வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியான நடிகை அபிநயா 2008ம் ஆண்டு நெனிந்தே என்ற தெலுங்கு படம் மூலம் அறிமுகமானார். அதை தொடர்ந்து ராஜா, சங்கமம் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்த அவர் சமுத்திரகனி இயக்கத்தில் உருவான நாடோடிகள் படத்தில் நடித்து பிரபலமானார். அந்த படத்திற்காக பல விருதுகளையும் வென்றுக் குவித்தார்.

அதை தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், ஈசன், 7ஆம் அறிவு, வீரம், பூஜை, தனி ஒருவன், மார்க் ஆண்டனி போன்ற பல படங்களில் நடித்துள்ளார். மேலும், அபிநயா தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்து வருகிறார். இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் மூக்குத்தி அம்மன் 2 படத்திலும் நடித்து வருகிறார்.

இப்படி பிஸியாக நடித்து வரும் அபிநயா நடிகர் விஷாலை காதலித்து வருவதாக கிசு கிசு பரவியிருந்த நிலையில் சமீபத்தில் அவர் அளித்திருந்த பேட்டியில் தான் 15 வருடமாக தன் ஆண் நண்பரையே காதலித்து வருவதாக கூறியிருந்தார். அதை தொடர்ந்து அவர் நிச்சயம் செய்துக் கொண்ட புகைப்படங்களையும் நைட் பார்டியில் தன் காதலருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் பகிர்ந்திருந்தார்.

இந்நிலையில் தற்போது திருமணத்திற்கு தயாராகும் அபிநயா மெஹந்தி வைத்துக்கொண்டு எடுத்த போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். பலரும் அவருக்கு திருமண வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். விரைவில் திருமணம் செய்துக் கொண்ட புகைப்படங்களையும் அபிநயா வெளியிடுவார் என்றே தெரிகிறது.