Connect with us

தைரியம் இருந்தால் முகத்திற்கு நேரே பேசுங்கள்…. பேட்டியில் கோபப்பட்ட அபிஷேக் பச்சன்……

abhishek bachchan

Cinema News

தைரியம் இருந்தால் முகத்திற்கு நேரே பேசுங்கள்…. பேட்டியில் கோபப்பட்ட அபிஷேக் பச்சன்……

கோலிவுட்டில் எப்படி அஜித் ஷாலினி, சூர்யா ஜோதிகா என நட்சத்திர தம்பதிகள் உள்ளார்களோ அதேபோல் பாலிவுட்டில் பிரபல நட்சத்திர தம்பதிகளாக வலம் வருபவர்கள் தான் அபிஷேக் பச்சன் – ஐஸ்வர்யா ராய். இவர்கள் இருவருமே பாலிவுட்டில் முன்னணி நடிகர்களாக திகழ்கிறார்கள்.

இந்த தம்பதிகளுக்கு ஆராத்யா என்ற 10 வயது மகள் உள்ளார். இந்நிலையில் சமீபத்தில் ஆராத்யாவின் 10 வது பிறந்தநாளை கொண்டாட மாலத்தீவிற்கு குடும்பத்துடன் சென்ற அபிஷேக் பச்சன் அங்கு அவரது மகள் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடினார்கள்.

மேலும் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை அபிஷேக் பச்சன் அவரது சேசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும் ஆராத்யாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்திருந்தனர். ஆனால் சிலர் ஆராத்யாவைப் பற்றியும், அபிஷேக் பச்சன் குடும்பத்தைப் பற்றியும் கேலி செய்திருந்தனர்.

abhishek bachchan

abhishek bachchan

இதனால் கடுப்பான அபிஷேக் பச்சன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் மிகவும் காட்டமாக பேசியிருந்தார். அவர் கூறியதாவது, “ஆராத்யாவை கேலி செய்வதை நான் பொறுத்துக்கொள்ள மாட்டேன். அது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விஷயம்.

ஒரு பிரபலமாக நான் விமர்சனங்களை எதிர்கொண்டுதான் ஆகவேண்டும். ஆனால், என் மகளை கேலி செய்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆராத்யாவை கேலி செய்பவர்கள் தைரியம் இருந்தால் என் முகத்துக்கு நேரே அதை செய்து பார்க்கட்டும்” என கோபமாக கூறியிருந்தார்.

அவர் கூறுவதும் நியாயம் தான். அவர் ஒரு பிரபலம் என்பதால் இதுபோன்ற விமர்சனங்களை எதிர்கொள்ளலாம். ஆனால் அவரது மகளும் குடும்பத்தாரும் விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? பிரபலங்களின் குழந்தைகளை விமர்சனம் செய்வது மிகவும் தவறான செயலாகும்.

Continue Reading
To Top