அய்யய்யோ...காதல் கோட்டை படத்தில் நடிக்க வேண்டிய ஹீரோ அவர்தானாம்!.. வட போச்சே!..
நடிகர், சீரியல் நடிகர், இயக்குனர் என பன்முக அவதாரம் கொண்டவர் அபிஷேக் சங்கர்.
1985 - 2018 வரை 23 ஆண்டுகள் திரை உலகில் நீடித்துள்ளார். மோகமுள் ஆரம்பிச்சி துப்பறிவாளன் வரை இந்தப் பயணம் நீடித்துள்ளது.
மிகவும் குறைவான படங்களே பண்ணினாலும் நல்ல கேரக்டராகப் பண்ணியுள்ளார். பென்சில், ஆம்பள, பதினாறு என நல்ல ஹோப் உள்ள படங்களைத் தேர்வு செய்து நடித்துள்ளார் அபிஷேக்.
இனி அவர் சொல்லக் கேட்போம்.
மோகமுள் படத்துக்கு அப்புறம் உன்னி நிவாதம் என்ற படம் பண்ண ஆரம்பிச்சேன். அடுத்து கமல் சார் நடித்த நம்மவர் படத்தில் கரண் நடித்த ரோல் கிடைச்சது. என் ஆசை மச்சான் படம் வாய்ப்பு கிடைச்சது. இதெல்லாம் உன் நினைவாக படத்தால நடிக்க முடியாமல் நழுவிய வாய்ப்புகள். இது ரொம்ப கமர்ஷியலா ஹிட்டாகும்னு நினைச்சேன்.
78 சதவீதம் படம் முடிவடைந்த நிலையில் இந்தப்படத்தின் தயாரிப்பாளருக்கும், டைரக்டருக்கும் பிரச்சனை வந்தது. அப்புறம் நான் பாம்பே போயிட்டேன். அப்புறம் ஒரு பத்து மாதங்கள் கழித்து கோவைக்கு நண்பரோட திருமணத்திற்கு சென்றேன்.
அங்கு போய் பார்த்தால் படம் பெரிய ஹிட். அந்தப் படத்தைத் தியேட்டர்ல போயி பார்த்தா அந்தப் படத்துல நான் நடிச்ச சீன்லாம் வந்துருக்கு. அந்தப் படம் பெரிய ஹிட். பெரிய நடிகர் நடிச்சிருந்தாரு.
ரொம்ப மன அழுத்தமாகி கேஜி தியேட்டர் காம்ப்ளக்ஸ்ல நடுரோட்டுல உடைஞ்சி அழ ஆரம்பிச்சிட்டேன். என்னடா இந்தப் படத்தைத் தான் நாம நம்பிட்டு இருந்தோம்...இது இப்படி ஆயிடுச்சேன்னு...அப்புறம் டைரக்டர்க்கு போன் பண்ணினோம்.
டைரக்டர் வந்து இப்ப நீங்க பிரஸ்ல பேசுங்கன்னாரு. பெரிய ஸ்டார் அந்தப் படத்துல வந்துட்டாரு. இதுக்கு அப்புறம் எப்படி சார் பேசுறது...வேண்டாம்னுட்டேன்.
பெரிய ஸ்டார்க்கு பெரிய லைஃப் கொடுத்த படம்...அது தான் அஜீத் சார் நடிச்ச காதல் கோட்டை. தேசிய விருது பெற்ற படம். அதுக்கு அப்புறம் தான் டிவி சீரியல்ல நடிக்க ஆரம்பிச்சேன்..கிட்டத்தட்ட 110 சீரியல்கள்ல நடிக்க ஆரம்பிச்சேன். கோலங்கள் தொடரில் பாஸ்கர் கேரக்டரில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 7 வருஷங்கள் நடித்த மெகா சீரியல் இது.
2020ல் சன்டிவியில் கண்மணி தொடரை இயக்கியுள்ளார். 2022ல் வெளியான எண்ணித்துணிக படத்தில் டாக்டர் கேரக்டரில் நடித்துள்ளார். துப்பறிவாளனுக்குப் பிறகு வந்தா ராஜாவா தான் வருவேன், க பெ ரணசிங்கம், கபடதாரி, மிருகா ஆகிய படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.