முதல் நாளே தம் அடித்து சர்ச்சையில் சிக்கிய பிக்பாஸ் பெண் போட்டியாளர்....!

by ராம் சுதன் |   ( Updated:2022-02-01 06:00:24  )
bigg boss ultimate
X

இதுநாள் வரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் சீசன் 5 ரியாலிட்டி ஷோ சமீபத்தில் முடிவடைந்தது. இந்த சீசனில் சின்னத்திரை நடிகர் ராஜூ டைட்டிலை தட்டி சென்றார். இதனையடுத்து ரசிகர்களை உற்சாகப்படுத்த நினைத்த விஜய் டிவி அதிரடியாக பிக்பாஸ் அல்டிமேட் என்ற புதிய நிகழ்ச்சியை தொடங்கி விட்டது.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கும் அல்டிமேட் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கும் உள்ள வித்தியாசம் என்னவெனில் இந்த நிகழ்ச்சி டிவி ஷோ போல ஒரு மணி நேரம் இல்லாமல் 24 மணி நேரமும் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. எப்போது வேண்டுமானாலும் ஓடிடியில் பார்த்துக்கொள்ளலாம். இதில் பிக் பாஸ் சீசன் 1முதல் 5 வரையிலான போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

bigg boss abirami

bigg boss abirami

மேலும் முதல் நாள் என்பதால் மட்டும் இந்நிகழ்ச்சி டிவியில் ஒளிபரப்பப்பட்டது. இதில் வனிதா, சினேகன், சுஜா வருணி, அபிநய், அனிதா, பாலாஜி முருகதாஸ், தாடி பாலாஜி, சுருதி, தாமரை செல்வி, ஷாரிக், நிரூப், ஜூலி, அபிராமி, சுரேஷ் சக்கரவர்த்தி ஆகிய 14 பேர் கலந்துகொண்டனர்.

இந்நிலையில் முதல் நாளே போட்டியாளர் அபிராமி சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஆம் பிக்பாஸ் வீட்டில் உள்ள ஸ்மோக்கிங் ரூமில் போட்டியாளர்களான நிரூப், அபிநய், ஷாரிக் ஆகியோர் தம் அடித்து கொண்டிருந்தனர். இவர்களுடன் ஒரு பெண் பேட்டியாளரும் ஒன்றாக அமர்ந்து தம் அடித்து கொண்டிருக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

bigg boss abirami

bigg boss abirami

அவர் வேறு யாருமல்ல பரதநாட்டிய நடிகை அபிராமி தான். இவர்கள் நான்கு பேரும் சேர்ந்து புகை பிடிக்கும் அறையில் நின்று புகை பிடித்து இருக்கிறார்கள். சோசியல் மீடியாவில் பரவி வரும் இந்த வீடியோவை கண்ட பலரும் அபிராமியை விமர்சித்து வருகிறார்கள். சிலர் அவருக்கு ஆதரவாகவும் பேசி வருகிறார்கள்.

Next Story