முதல் வைல்ட் கார்டு என்ட்ரி... துள்ளி குதித்த பிரியங்கா - யாரு தெரியுமா?
மீண்டும் பிக்பாஸ் வீட்டில் நுழைந்த அபிஷேக்!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த சீசன் பெரிதாக சொல்லிக்கொள்ளும் படி சுவாரஸ்யம் இல்லை என்றாலும் ஏதோ ஓரளவுக்கு ஓடிக்கொண்டிருக்கிறது என்றே கூறலாம். காரணம் இந்த வீட்டில் ராஜு, பிரியங்கா, இமான் அண்ணாச்சி இவர் மூவரின் டைமிங் காமெடி ரசிகர்களை டிவியின் முன் அமரவைக்கிறது.
இந்த சீசனில் மட்டும் காதல், ரொமான்ஸ் இல்லாத ஒரு சீசன் என்றே கூறலாம். ஆனால், சண்டை சர்ச்சரவு, பொறாமை பழிவாங்குதல் உள்ளிட்டவை குறையில்லாமல் இருக்கிறது. இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள ப்ரோமோ வீடியோவில் முதல் வைல்ட் கார்ட் என்ட்ரியில் புது நபர் நுழைந்துள்ளார்.
இதையும் படியுங்கள்: ஊத்துக்குளி வெண்ண போல உடம்பு!… ரசிகர்களை சூடேற்றிய விமலா ராமன்…..
அது அபிஷேக் தான் பலரும் கூறி வருகின்றனர். அவரை பார்த்ததும் வீட்டில் உள்ள அர்ச்சனா, தாமரை உள்ளிட்ட பலரும் அதிர்ச்சியாகிவிட்டனர். ஆனால், ஆடியன்ஸோ, அவன் அபிஷேக்கா மட்டும் இருக்கவே கூடாது ஆண்டவா என பிரார்த்தித்து கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.