சிவாஜி படத்தில் நடிக்க வந்த வாய்ப்பு!. முடியாம போச்சி!.. இப்ப வரைக்கும் ஃபீல் பண்ணும் நடிகை…

Published on: February 12, 2024
sivaji
---Advertisement---

Actor Sivaji Ganesan: தமிழ் சினிமாவில் நடிப்பிற்கு இலக்கணம் வகுத்துக் கொடுத்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். மேடை நாடகங்களில் நடித்து அதன் மூலம் தன் நடிப்பை வளர்த்துக் கொண்டவர். வெள்ளித்திரையில் நடிக்கும் போது கூட அவ்வப்போது மேடை நாடகங்களிலும் நடித்துக் கொண்டுதான் இருந்தார்.

நடிப்புப் பல்கலைக் கழகம், நடிப்பின் அசுரன் என நடிப்பிற்கு உதாரணமாக எந்த பெயர் சூட்டினாலும் அதற்கு பொருத்தமான நடிகர் இவர் ஒருவர் மட்டும்தான். அந்த காலத்தில் அனைத்து முன்னணி நடிகைகளுடனும் ஜோடி சேர்ந்து நடித்த சிவாஜி பத்மினியுடன் மட்டும்தான் அதிகமான படங்களில் சேர்ந்து நடித்திருக்கிறார்.

இதையும் படிங்க: அப்பாவோட மாஸ மொத்தமா சரித்து விட்ட ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!.. 2ம் நாளில் காலியான லால் சலாம்!..

இருவரும் சேர்ந்து கிட்டத்தட்ட 40 படங்களுக்கு மேல் ஜோடியாக நடித்திருக்கின்றனர். அதுமட்டுமில்லாமல் இவர்களின் காம்போவில் உருவாகும் படங்களைத்தான் ரசிகர்களும் விரும்பினர். அவருடைய மார்கெட் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்ததும் நடிப்பிற்கு முற்றுப்புள்ளி வைக்கவில்லை சிவாஜி.

குணச்சித்திர வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார். ரஜினி, கமல் இவர்களின் படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார். முதல் மரியாதை படத்தில் யாரும் எதிர்பாராத ஒரு கேரக்டரில் நடித்து அசத்தினார்,

இதையும் படிங்க: அஜித் போட்ட கண்டிசன்.. ‘விடாமுயற்சி’ படக்குழு செய்த தவறே இதுதான்! ரிலீஸில் ஏற்படும் சிக்கல்

இந்த நிலையில் சிவாஜியின் நடிப்பில் வெற்றிப்படமாக அமைந்த ‘சிவகாமியின் செல்வன்’ படத்தில் முதலில் நடிக்க இருந்தது நடிகை வெண்ணிறாடை நிர்மலாதானாம். ஆனால் இதில் வாணிஸ்ரீ மற்றும் லதா ஆகியோர் நடித்திருப்பார்கள்.

vennira aadai

முதலில் இந்தப் படத்திற்கு வெண்ணிறாடை நிர்மலா நடிக்க இருந்த நிலையில் அந்த நேரத்தில் வெண்ணிறாடை நிர்மலா வேறொரு படத்தில் வேறொரு இடத்தில் சூட்டிங்கில் இருந்தாராம். சொன்ன நேரத்திற்கு சென்னைக்கு சிவகாமியின் செல்வன் பட சூட்டிங்கிற்கு வெண்ணிறாடை நிர்மலாவால் வரமுடியவில்லையாம்.

இதையும் படிங்க: குடித்துவிட்டு படப்பிடிப்புக்கு வந்த ஹீரோ!. கடுப்பாகி பானுமதி செய்த தரமான சம்பவம்!…

ஆனால் இதை சிவாஜியிடம் ஒரு சில பேர் வெண்ணிறாடை நிர்மலாவை பற்றி தவறுதலாக சொல்ல அதன் பிறகே வாணிஸ்ரீ மற்றும் லதா இந்தப் படத்திற்குள் வந்ததாக சித்ரா லட்சுமணன் கூறினார்.மேலும், அந்த படத்தில் நடிக்க முடியாமல் போனதுக்காக பல வருடங்கள் வருத்தப்பட்டாராம் நிர்மலா.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.