Home > Cinema News > வெற்றிமாறன் படப்பிடிப்பில் விபத்து...சண்டை நடிகர் மரணம்...திரையுலகில் அதிர்ச்சி...
வெற்றிமாறன் படப்பிடிப்பில் விபத்து...சண்டை நடிகர் மரணம்...திரையுலகில் அதிர்ச்சி...
X
த்ரில்லர் கதை களத்தில் உருவாகி வரும் திரைப்படம் விடுதலை. வெற்றிமாறன் எழுதி இயக்கி இருக்கும் இப்படத்தில் சூரி நாயகனாக நடிக்கிறார். ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் எல்ரெட் குமார் தயாரித்துள்ளார். இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
இரண்டு பாகங்களாக உருவாக இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சென்னை கேளம்பாக்கத்தில் நடந்த படப்பிடிப்பின்போது ரோப் கயிறு அறுந்து சண்டை பயிற்சியாளர் என்.சுரேஷ் உயிரிழந்தார். இந்த செய்தி தற்போது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கி இருக்கிறது.
Next Story