விஜயகாந்த் படப்பிடிப்பில் ரணகளம்!! கேப்டன் செய்த காரியத்தால் ஒளிப்பதிவாளரின் முகத்தில் வழிந்தோடிய ரத்தம்…

by Arun Prasad |
Vijayakanth
X

Vijayakanth

தமிழ் சினிமாவின் பழம்பெரும் இயக்குனராக திகழ்ந்தவர் பி.ஆர்.பந்துலு. இவரின் மகளான பி.ஆர்.விஜயலட்சுமி ஆசியாவின் முதல் பெண் ஒளிப்பதிவாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் பாக்யராஜ் இயக்கிய “சின்ன வீடு” என்ற திரைப்படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார்.

BR Vijayalakshmi

BR Vijayalakshmi

அதனை தொடர்ந்து “அறுவடை நாள்”, “”மல்லு வேட்டி மைனர்” போன்ற பல திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார் பி.ஆர்.விஜயலட்சுமி. மேலும் சில திரைப்படங்களையும் தொலைக்காட்சி தொடர்களையும் இயக்கியுள்ளார்.

இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட பி.ஆர்.விஜயலட்சுமி, விஜயகாந்த்தின் “சிறைப் பறவை” திரைப்படத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது நடைபெற்ற விபத்து குறித்து பகிர்ந்துகொண்டுள்ளார்.

Sirai Paravai

Sirai Paravai

அத்திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது Low Angle-ல் ஒரு சண்டைக் காட்சியை படமாக்கவேண்டிய சூழல் வந்தது. அதில் விஜயகாந்த் குதித்து தவ்வி சண்டை போடுவது போன்று ஒரு காட்சி இருந்ததாம். Low Angle என்பதால் பி.ஆர்.விஜயலட்சுமி கேமராவை பிடித்துக்கொண்டு படுத்தபடி படமாக்கிக்கொண்டிருந்தார்.

BR Vijayalakshmi

BR Vijayalakshmi

அப்போது தவ்வி குதித்து சண்டை போட்ட விஜயகாந்த் தவறுதலாக கேமராவின் மீது விழுந்துவிட்டாராம். கேமராவை விஜயலட்சுமி முகத்துக்கு நேராக வைத்துக்கொண்டிருந்ததால் கேமரா முகத்தின் மீது அழுத்து காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்திருக்கிறது. அதன் பின் அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு மீண்டும் அந்த காட்சியை படமாக்கியிருக்கிறார் பி.ஆர்.விஜயலட்சுமி.

விஜயகாந்த், ராதிகா ஆகியோரின் நடிப்பில் 1987 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “சிறைப்பறவை”. இத்திரைப்படத்தை மனோபாலா இயக்கியிருந்தார். இத்திரைப்படம் மிகப் பெரிய ஹிட் திரைப்படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சிம்பு மட்டும் ஒழுங்கா ஷூட்டிங் வந்திருந்தா?… மன வேதனையை பகிர்ந்த பிரபல தயாரிப்பாளர்…

Next Story