சொன்னது எல்லாமே பொய்!.. பிக்பாஸிலிருந்து கமல் விலக காரணமே இதுதானாம்

kamal
BiggBoss Kamal: விஜய் டிவியில் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருப்பது பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் .இந்த சீசனை பற்றிய அறிவிப்பு வெளியானதில் இருந்தே சோசியல் மீடியாவில் இதைப் பற்றி ஏராளமான செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. ஏற்கனவே கடந்த ஏழு சீசன்களை தொகுத்து வழங்கிய கமல் இந்த எட்டாவது சீசனில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்திருந்தார்.
அது பெரும் பேசும் பொருளாக மாறியது. ஏனெனில் கமலுக்காகவே பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்தவர்கள் ஏராளம். அவருடைய கேள்வி கேட்கும் திறன், போட்டியாளர்களை கையாளும் விதம், நிகழ்ச்சியை சுவாரசியமாக கொண்டு செலுத்துதல் போன்றவை கமலால் மட்டும் தான் முடியும். அதனாலேயே ஏழு சீசன்களையும் அவரால் தொகுத்து வழங்க முடிந்தது.
இதையும் படிங்க: குஷி படத்தை பற்றி பேசி வசமா மாட்டிக்கிட்ட பிரியங்கா மோகன்! கோலிவுட்டில் இனி அவ்ளோதான்
ஆனால் இந்த சீசனை தொகுத்து வழங்குவதில்லை என கமல் அறிவித்திருந்தார். அது பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அதற்கான காரணத்தையும் கமல் கூறி இருந்தார். சினிமாவில் தனக்கு இருக்கும் கமிட்மெண்ட்ஸ் மற்றும் சில பல வேலைகள் ஆகியவற்றின் காரணமாகவே இந்த நிகழ்ச்சியிலிருந்து தான் விலகுவதாக முடிவு எடுக்க இருப்பதாக அவருடைய அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
அவர் சொல்வதை போல கல்கி படத்தின் இரண்டாம் பாகம், தக் லைஃப் படம், விக்ரம் 2 என அடுத்தடுத்து பல படங்களை கைவசம் வைத்திருக்கும் கமல் இனிமேல் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க மாட்டார் என்றே மக்களும் கூறி வந்தார்கள். இந்த நிலையில் பிரபல செய்தி வாசிப்பாளர் ஒருவர் உண்மையான காரணம் அது அல்ல .இப்போது கமல் ஆளும் கட்சியுடன் கூட்டணி வைத்திருப்பதால் வருங்காலத்தில் அவருக்கு ராஜ்யசபாவில் எம்பி பதவி கண்டிப்பாக கொடுக்கப்பட உள்ளது.
இதையும் படிங்க:அஜித்தின் அடுத்த படம் மங்காத்தா2 வா? வெங்கட் பிரபுவே சொல்லிட்டாரே!..
அதை காரணம் காட்டியே இந்த சீசனில் இருந்து கமல் விலகி இருக்கிறார் என அந்த செய்தி வாசிப்பாளர் கூறியிருக்கிறார். மேலும் இவர் கூறும் போது இன்னொரு பக்கம் கடைசி சீசனில் ஏகப்பட்ட எதிர்மறையான விமர்சனத்தை கமல் எதிர்கொண்டார்.
முக்கியமாக பிரதீப் ஆண்டனி விஷயத்தில் அவருடைய சாபம் கூட கமலை இப்படி ஒரு முடிவை எடுத்து இருக்க வைத்திருக்கும் என ரசிகர்கள் ஒரு பக்கம் கூறி வருகிறார்கள் என வினோத் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். ஆனால் உண்மையில் ராஜ்யசபா எம்பி பதவி அவருக்காக காத்துக் கொண்டிருக்கிறது. ஏனெனில் அரசியல் ஒரு பக்கம் சினிமா ஒரு பக்கம் என இருக்கும்போது இன்னும் பல விமர்சனத்திற்கும் கமல் ஆளாக கூடும் என்பதை மனதில் வைத்தே அந்த நிகழ்ச்சியிலிருந்து அவர் விலகி இருக்கிறார் என அந்த செய்தி வாசிப்பாளர் அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க: மொத்தமா கலைச்சி விட்டாச்சி… புறநானாறு படத்தில் இத்தனை மாற்றமா?