சூப்பர்ஸ்டார்களின் சாதனையை சமன் செய்த நடிகை ஊர்வசி… விருதில் சாதித்த சுவாரஸ்யம்…

by Akhilan |
சூப்பர்ஸ்டார்களின் சாதனையை சமன் செய்த நடிகை ஊர்வசி… விருதில் சாதித்த சுவாரஸ்யம்…
X

மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி மற்றும் மோகன்லால் வாங்கிய 6 கேரள விருதுகளின் எண்ணிக்கையை கேரளா திரைப்பட விருதை வாங்கி நடிகை ஊர்வசி சமன் செய்து இருக்கிறார்.

இதையும் படிங்க: 70வது தேசிய திரைப்பட விருதுகள்… முந்திக்கொண்ட பொன்னியின் செல்வன்… சிறந்த நடிகர் யார்?

மலையாள படத்தில் நடித்த நடிகை ரஞ்சனியை முந்தானை முடிச்சி படத்துக்கு ஆடிஷன் செய்தார் பாக்கியராஜ். ஆனால் அவர் செட்டாகாமல் போக அவருடன் வந்த தங்கை கவிதா சரியாக தமிழ் படிக்க அவரை முந்தானை முடிச்சி படத்துக்கு ஒப்பந்தம் செய்கிறார் பாக்கியராஜ்.

அப்படத்தில் நடிக்கும் போது கவிதா என்ற பெயரை ஊர்வசி என மாற்றினர். 14 வயதில் தொடங்கியது அவர் பயணம் பல சூப்பர்ஹிட் படங்களில் நடித்து பிரபல நடிகையாக அசரடித்து வருகிறார். ஆனால் முந்தானை முடிச்சு படத்தில் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தாலும் முன்னணி நடிகையாக வாய்ப்பு கிடைக்கவில்லை.

சில படங்களில் இரண்டாம் நாயகியாகவே இருந்தார். ஆனால் தமிழில் இறங்கினாலும் மலையாளத்தில் தொடர்ந்து ஏறுமுகத்திலே இருந்தார். அசைக்க முடியாத நடிகையாக வெற்றி படங்களில் நடித்து வந்தார். மம்மூட்டி, மோகன்லால் உள்ளிட்டோருடன் ஜோடி போட்டார். தமிழில் ஊர்வசி நடிப்பதை விட மலையாளத்தில் அவர் நடிப்பது அத்தனை தத்ரூபமாக இருக்கும்.

இதையும் படிங்க: கோட்டை விட்ட தனுஷ்…தட்டி தூக்கிய நித்யா மேனன்… 2 தேசிய திரைப்பட விருதை வென்ற திருச்சிற்றம்பலம்..

Next Story