சரோஜாதேவி எடுத்த தவறான முடிவு!.. மொத்தமா மார்க்கெட் போனதுதான் மிச்சம்!...

Actress sarojadevi: சரோஜா தேவி தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணியில் இருந்த கதாநாயகி. இவரின் கொஞ்சும் தமிழ் பேச்சுக்கே பல ரசிகர்களும் உண்டு. அந்த கால ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர். இவர் தமிழில் திருமணம் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

பின் எம்ஜிஆர், சிவாஜி போன்ற பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்திருந்தார். இவரின் திரைப்படங்கள் இவருக்கு பெரும்பாலும் வெற்றிப்படங்களாகவே அமைந்தன. அன்பே வா, ஆலயமணி போன்ற பல திரைப்படங்களின் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கினார்.

இதையும் வாசிங்க:நடிகர் திலகம் சிவாஜி நடித்தும் ரிலீஸ் ஆகாத படங்கள்!. அட இவ்வளவு இருக்கா?!…

இப்படி நன்றாக போய் கொண்டிருந்த இவரின் சினிமா வாழ்க்கையில் பல மாற்றங்களை கொண்டுவந்தது இவரது திருமணம்தான். திருமணமான பின் இவர் சினிமாவில் இருந்து சில காலம் விலகியே இருந்தார். பின் சில காலத்திற்கு பின் தனது கணவரின் சம்மதத்தோடு சினிமாவில் திரும்பவும் நடிக்க ஆரம்பித்தார்.

saroja devi

saroja devi

இவர் நடிப்பில் 1967ஆம் ஆண்டு வெளியான திரைப்படம்தான் பெண் என்றால் பெண். இப்படத்தில் ஜெமினிகணேசன் கதாநாயகனாக நடித்திருந்தார். இப்படத்தில் நடிகர் அசோகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அப்போது அவருக்கு ஜோடியாக நடிக்க வேண்டிய நடிகைக்கான தேர்வு நடைபெற்றுள்ளது.

இதையும் வாசிங்க:உன்கூட இருக்க ஒருத்தனையும் நம்பாதே!. கழுத்த அறுத்துருவானுங்க!. எம்ஜிஆரை எச்சரித்த எம்.ஆர்.ராதா

அக்கதாபாத்திரத்தில் நடிக்க தானே முன்வந்துள்ளார் சரோஜாதேவி. ஆனால் அவர் செய்த தவரும் இதுதான். இப்படம் இவருக்கு 100வது திரைப்படமும் கூட. இப்படம் இவருக்கு பெரிய அளவில் வெற்றிப்படமாக அமையவில்லை. மேலும் ஜெமினிகணேசனுடன் இணைந்து கதாநாயகியாக நடித்திருந்த சரோஜா தேவி துணைக்கதாபாத்திரத்தில் நடித்தது இவரின் சினிமா வாழ்க்கையில் சரிவை சந்தித்து கொடுத்தது.

sarojadevi

இதன்பின் இவர் நடித்த பல திரைப்படங்களும் இவருக்கு அந்த அளவிற்கு வெற்றியை தேடி தரவில்லையாம். இவ்வாறு தன்னுடைய சினிமா வாழ்க்கைக்கு தானே முடிவு கட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிங்க:இந்திப்பாடகியையே அழ வைத்த இளையராஜாவின் இசை… அவ்ளோ உருக்கமான பாடலாம்!..

 

Related Articles

Next Story