
Cinema History
பெற்றோர் தங்கள் பிள்ளைகளுடைய எதிர்காலத்தை எப்படி தீர்மானிக்க வேண்டும் என்று ஆக்ஷன் கிங் கொடுக்கும் அருமையான ஐடியா…!
ஆக்ஷன் கிங் என்றாலே நாம் அனைவருக்கும் யார் என்று தெரியும். அர்ஜூன். இவர் தனது வாழ்வில் நடந்த மறக்க முடியாத சில நினைவுகளை பகிர்கிறார்.
சின்ன வயசுல திருடுறது எனக்கு ரொம்ப பிடிக்கும். திருடுறதுல ஒரு த்ரில் இருக்கும். கடைக்குப் போய் பென்சில், ரப்பர், புக்குன்னு திருடிருக்கேன்.
16 வயது இருக்கும்போது ஒருநாள் நானும் என் ப்ரண்ட்டும் பார்க்ல உட்கார்ந்து நாளைல இருந்து திருடலாம்னு முடிவு பண்ணினோம். அதுக்கப்புறம் மறுநாள் தான் எனக்கு சினிமாவுல நடிக்க சான்ஸ் கிடைச்சது. இந்தப்படம் வரலைன்னா திருடனா ஆயிருப்பேன்.

Arjun
டீன் ஏஜ்ல நான் போலீஸாகணும்னு போட்டோ எடுத்திருக்கேன். பள்ளிப்பருவத்தில் நான் நல்ல மாணவன். ஆனா ஸ்கூலுக்கேப் போறதில்ல. எல்லா பாடங்களிலும் எனக்கு 35 மார்க் தான் வரும். அவ்ளோ தான் நான் படிக்கறதே.
எனக்கு அப்பவே பிசிகல் இதுல ரொம்ப இன்ட்ரஸ்ட். கிளாஸ் நடக்கும்போதே வெளியே வந்துட்டு நான் ஜிம்முக்குப் போயிருவேன். ஜிம்னாஸ்டிக், புட்பால் இந்த மாதிரி தான் நான் ஸ்போர்ட்ஸ்ல இருந்திருக்கேன். வருஷத்துல 15 நாள் தான் ஸ்கூலுக்கே போவேன்.

Arjun
படிக்கணும்ங்கறது ஒரு ஜெனரல் நாலெட்ஜ்க்கு. ஆனா மக்களுக்கு நான் என்ன சொல்றதுன்னா என்ன நாம மார்க் வாங்கியிருக்கோம்ங்கறது முக்கியமல்ல. எதுல இன்ட்ரஸ்ட் இருக்கோ அதுல அவங்கள வளர்த்து விடுறது நல்லதுன்னு நான் நினைக்கிறேன். ஒரு குழந்தைக்கு ஸ்போர்ட்ஸ்ல தான் இன்ட்ரஸ்ட்ன்னா அவனை ரூமுக்குள்ள அடைச்சி போட்டு படி படின்னு சொல்லக்கூடாது.
அல்ஜீப்ரால உனக்கு மார்க் வரல நீ வேஸ்ட்னு சொன்னா அவனோட லைப் உண்மையிலேயே வேஸ்ட் ஆயிடும். முடியாதுங்கறது அவன் மைன்ட்ல போயி நாம திணிச்சம்னா அது அப்படியே இருக்கும். காம்ப்ளக்ஸாயிடும். என் இதுல நான் பெரிய ஆள் அப்படிங்கறது அவனுக்கு சொல்லி வளர்த்தோம்னா அவன் பெரிய ஆளா வருவான்.
மங்காத்தா 2 எந்த அளவு எதிர்பார்ப்பு இருக்குன்னா எங்க போனாலும் மங்காத்தா மங்காத்தாங்கறாங்க. வெங்கட்பிரபு ஏற்கனவே எனக்கு கதை சொல்லிருக்காரு. சீக்கிரம் நடக்கும்னு நெனைக்கிறேன்.
கொலைகாரன் படத்துல நான் நல்லவனா கெட்டவனான்னு சொல்ல முடியாது. ஏன்னா டைட்டிலே கொலைகாரன்.

Arjun army
இந்தப்படத்துல நான் கெட்டவன்னு சொன்னா நான் தான் கொலைகாரன்னு சொல்லிடுவீங்க. நல்லவன்னு சொன்னா விஜய் ஆண்டனிய கொலைகாரன்னு சொல்லிடுவீங்க. எனக்கு ஹீரோயின் இல்ல. வருத்தமாகத் தான் இருக்கு.
கொலைகாரன்ங்கற டைட்டில் வச்சது விஜய் ஆண்டனி. இந்தப்படம் மர்டர் திரில்லர். இந்தப்படத்தைப்பற்றி நிறைய பேசிக்கிட்டே இருக்கலாம்.