அப்படிப்பட்ட நிலையில் சாவித்ரி அம்மாவை பார்த்தேன்!.. மனம் உருகும் நடிகர் ராஜேஷ்…

by சிவா |   ( Updated:2023-04-01 08:16:21  )
rajesh
X

rajesh

திரையுலகில் கருப்பு வெள்ளை காலம் முதல் கலர் சினிமா வரை பல திரைப்படங்களில் நடித்தவர் சாவித்ரி. இவர் ஆந்திராவை சேர்ந்தவர். ஆனால் அழகாக தமிழ் பேசி நடிப்பார். எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி ஆகியோருடன் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிப்பில் இவரை பெண் சிவாஜி என்றே திரையுலகில் அழைப்பார்கள். மிகவும் திறமையான நடிகையாக பார்க்கப்பட்டார். பாச மலர் திரைப்படத்தில் சிவாஜியின் தங்கையாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை அழவைத்தவர் இவர்.

நடிகர் ஜெமினியை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகனும் பிறந்தார். சில கெட்ட பழக்கங்கள் மற்றும் சுற்றியிருந்தவர்கள் இவரை ஏமாற்றியது, திரைப்படங்களை தயாரித்து அதில் நஷ்மடைந்து கடன் ஏற்பட்டது என ஒருகட்டத்தில் உடைந்து போனார். இவரிடம் பணம் வாங்கியவர்கள், நிலங்களை வாங்கி வைத்திருந்தவர்கள் என எல்லோரும் இவரை ஏமாற்ற மனநலமும், உடல் நலமும் பாதிக்கப்பட்டு நோய்வாய்ப்பட்டு இறந்து போனார்.

இந்நிலையில், திரையுலகில் பல திரைப்படங்களில் நடித்த நடிகர் ராஜேஷ் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சாவித்ரி பற்றி சில தகவல்களை பகிர்ந்து கொண்டார். அந்த ஏழு நாட்கள் படத்தில் நடித்து கொண்டிருந்த போது படப்பிடிப்பு தளத்திற்கு அருகே சாவித்ரி அம்மாவின் வீடு இருந்தது. எனவே, அவரை பார்க்க சென்றேன். வீட்டின் வேலைக்காரி ஜெமினி சாரிடம் போன் செய்து ஏதோ சொல்ல, அவர் என்னை அனுமதிக்க சொன்னார். சாவித்ரியின் மகன் அவனுக்கு அப்போது 10 அல்லது 13 வயது இருக்கும். என்னை சோகமாக பார்த்தான். உள்ளே சென்று சாவித்ரி அம்மாவை பார்த்தேன்.

என் வாழ்வில் அப்படி ஒரு அதிர்ச்சியான சம்பவம் நடந்ததே இல்லை. அதை என்னால் வார்த்தையால் விவரிக்கவே முடியாது. அதை சொல்லவும் கூடாது. ஒரு கோடி ரூபாய் பணம் கொடுத்து இது யார் என கண்டுபிடிக்க சொன்னால் கூட யாராலும் அது சாவித்ரி அம்மா என கண்டுபிடிக்க முடியாது. அப்படி இருந்தார். அவர் ஜெமினியை காதலித்திருக்கவே கூடாது என்பது என் எண்ணம். அவ்வளவு தான தர்மங்கள் செய்தார். அவரின் பணம் போய், எல்லாரும் ஏமாற்றி வீடு ஜப்திக்கு வந்த போது வீட்டுக்கு வெளியே வருகிறார். அங்கு அவரின் டிரைவர் நிற்கிறார். அவரிடம் கார் சாவியையும், காருக்கான ஆவணங்களையும் கொடுத்து இதை வைத்து பிழைத்து கொள் என கூறிவிட்டு சென்றார். அவருக்கா அந்த நிலை’ என ராஜேஷ் கண்கலங்கி பேசினார்.

இதையும் படிங்க: 25 வருட நண்பர் முரளியே என்னை ஏமாத்திட்டார்!. குமுறும் தேவயாணி கணவர்!…

Next Story