நான் சரக்கடிக்கிறதை நிறுத்திட்டேன்!.. காரணம் இதுதான்!.. ஓப்பனா பேசிய விஜய் ஆண்டனி!..

by சிவா |   ( Updated:2024-11-22 08:12:24  )
நான் சரக்கடிக்கிறதை நிறுத்திட்டேன்!.. காரணம் இதுதான்!.. ஓப்பனா பேசிய விஜய் ஆண்டனி!..
X

Vijay antony: சினிமாவில் சவுண்ட் என்ஜினியராக இருந்து இசையமைப்பாளராக மாறியவர் விஜய் ஆண்டனி. சினிமாவில் சிலரை மட்டுமே எல்லோருக்கும் பிடிக்கும். அதில் விஜய் ஆண்டனியும் ஒன்று. எல்லா நடிகர்களின் ரசிகர்களுக்கும் இவரின் படங்கள் பிடிக்கும். இத்தனைக்கும் விஜய் ஆண்டனி ஒரு சிறந்த நடிகரெல்லாம் இல்லை.

நடிகராக அறிமுகம்:

காதல், ரொமான்ஸ், கோபம், சோகம், ஆத்திரம் என எல்லா சூழ்நிலைக்கும் ஒரே மாதிரி முகத்தை வைத்திருப்பார். ஆனாலும், அதை வைத்துக்கொண்டும் பிச்சைக்காரன் போன்ற ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார். பிச்சைக்காரன் படம் தெலுங்கில் டப் செய்யப்பட்டு ஹிட் அடித்திருக்கிறது.

இதையும் படிங்க: சிம்புவின் லைன்அப்!… கேட்கிறப்ப நல்லாத்தான் இருக்கு?!.. ஆனா ஒன்னும் ஒர்க்கவுட் ஆகலயேப்பா!…

எனவே, விஜய் ஆண்டனியின் எல்லா படங்களும் தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியாகி வருகிறது. நான் என்கிற படம் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கினார். அதன்பின் தொடர் ஹிட் படங்களை கொடுத்தார். சில தோல்விப்படங்களையும் கொடுத்திருக்கிறார். பெரும்பாலும் அவர் நடிக்கும் படங்களை அவரே தயாரித்தார்.

பிச்சைக்காரன் ஹிட்

விஜய் ஆண்டனி இயக்குனர் அவதாரம் எடுத்த பிச்சைக்காரன் 2 படமும் ஹிட் அடித்தது. ஆனால், அதன்பின் வெளியான படங்கள் அவருக்கு ஹிட் படங்களாக அமையவில்லை. கொலை, மழை பிடிக்காத மனிதன், ஹிட்லர் போன்ற படங்கள் பாக்ஸ் ஆபிசில் ஹிட் அடிக்கவில்லை.

Vijay Antony

Vijay Antony

இப்போது ககன மார்கன் என்கிற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த படம் பொங்கலுக்கு வெளியாக வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. ஊடகங்களில் விஜய் ஆண்டனி எப்போதும் மிகவும் வெளிப்படையாக பேசுவார். உள்ளொன்று வைத்து வெளியொன்று பேசும் பழக்கம் அவருக்கு இல்லை.

மதுப்பழக்கம்:

சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய அவர் ‘மது அருந்தினால் நமக்குள் இருக்கும் மிருகம் வெளியே வந்துவிடும். எனவே, தயவு செய்து யாரும் குடிக்காதீர்கள். நானே குடியை விட்டுவிட்டேன்.. கதையின் தேவைக்காக சினிமாவில் குடிப்பதில் போல நடிக்கிறேன்’ என சொல்லி இருக்கிறார்.

Next Story