More
Categories: Cinema History Cinema News latest news

விஜய் அரசியலுக்கு வருவதற்கு இதுதான் காரணமா?.. அதனால் யாருக்கு ஆபத்து?..

விஜய் சமீப காலமாக அரசியலில் ஈடுபாடு காட்டி வருகிறார். தன்னோட கட்சிக்குக் கூட தமிழக முன்னேற்ற கழகம் என்று பெயர் வைத்து விட்டார். அரசியலுக்கு இவர் வருவது இவருக்கு சாதகமா, பாதகமா என பிரபல யூடியூபர் ஆலங்குடி வெள்ளைச்சாமி சில கருத்துகளைத் தெரிவித்துள்ளார். பார்க்கலாமா…

அரசியல் அற்றவருக்கு ஓட்டுப் போடுவது ஆபத்தானது. அந்த வகையில் விஜய் அரசியல் அற்றவர். பெரியார், அம்பேத்கார் ஆகியோரைப் பற்றி அவர் படித்திருக்கிறாரா? அவரது சமீபத்திய படங்கள் ரொம்பவே அபத்தமாக அல்லவா உள்ளது? அவர் அரசியலுக்கு வந்தால் அவருக்கு தான் ரொம்ப பாதிப்பு. வேறு எந்தக் கட்சியையும் பாதிப்பதற்கான வாய்ப்புகளும் கிடையாது.

Advertising
Advertising

தான் இவ்வளவு நாள்கள் மக்களால் சம்பாதித்த பணத்தை எப்படியாவது அவர்களுக்கே செலவழிக்க வேண்டும் என்ற எண்ணமாகக் கூட இருக்கலாம். அவர்களது ரசிகர்கள் நிறைய பேர் இருக்கலாம். அவர்கள் எல்லோருமே விஜய் அரசியலுக்கு வந்தால் ஓட்டுப் போடுவார்களா என்பது நிச்சயமில்லை. விஜயகாந்துக்கு கூடிய கூட்டங்களைப் பார்த்தால் 3 லட்சம் பேருக்கும் அதிகமானோர் இருந்தனர்.

Vijay

ஆனால் அவர்கள் எல்லோரும் ஓட்டுப் போட்டார்களா என்பது தான் கேள்வி. நல்ல மனிதர் என்பதனால் கூடிய கூட்டமாக இருக்கலாம். இதில் இன்னொரு விஷயம் அவர் எப்போதுமே உதவி செய்யக்கூடிய மனப்பான்மை கொண்டவர். அரசியலுக்கு வருவதற்கு முன்பே இது போன்ற பல நலத்திட்ட உதவிகளை ஏழை எளியோருக்கு வெளியே தெரியாமல் செய்துள்ளார்.

விஜய் தன்னோட கட்சிக்கு பெயர் வைப்பதால் அது முன்னேறி விடாது. எம்ஜிஆர் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்னு திருநாவுக்கரசர் வைத்திருந்தார். டி.ராஜேந்தர் லட்சிய திராவிட முன்னேற்ற கழகம்னு வைத்திருந்தார். கழகம் என்று வைத்தால் மட்டும் எல்லோரும் முதல் அமைச்சர் ஆகி விட முடியாது. அவர்களுக்கு என்ன கொள்கை, என்ன கோட்பாடு? மக்கள்; சார்ந்து அவர்கள் என்ன யோசிக்கிறார்கள்? மக்களுக்கு அவர்களைப் பிடிக்குதா? இதெல்லாம் சேர்ந்து தான் ஒரு அமைப்பு.

பேரு வந்து ஒரு அடையாளம் தானே தவிர அதனால் எல்லாம் வந்து விடும் என்று சொல்ல முடியாது. எல்லாருமே எம்ஜிஆரைத் தான் ரோல் மாடலா நினைக்கிறாங்க. அவரைத் தாண்டி நிறைய பேர் வந்துருக்காங்க. சிவாஜி, விஜயகாந்த், டி.ராஜேந்தர், கமல், பாக்யராஜ் என பலரும் கட்சி ஆரம்பித்து இருக்கிறார்கள்.

ரஜினி வர்றேன்னு சொல்லிட்டு 20 வருஷம் போக்குக் காட்டிட்டுப் போயிட்டாரு. ஆனா மேலே சொன்ன நடிகர்கள்லாம் அரசியல்ல வெற்றி அடையவில்லை. அவர்கள் தங்களது சினிமா வாழ்க்கையை இழந்து இருக்கிறார்கள். கமலும் தான் கட்சியை ஆரம்பித்து தனியாக நிற்க முடியாத சூழலில் இருக்கிறார். விஜயைப் பொறுத்தவரை இன்னும் 10 வருஷம் கழித்துக் கூட ஆரம்பித்து இருக்கலாம்.

தமிழக மக்கள் இன்றைய கால கட்டத்தில் நடிகர்களோட படத்தைத் தான் பார்ப்பார்களே தவிர நடிகரை தங்களது தலைவராக ஏற்றுக்கொள்கிற காலம் முடிந்து போனது. ஒருவேளை விஜய் அரசியலுக்கு வந்தால் அவர் 120 கோடி சம்பளம் வாங்கும் நிலை மீண்டும் வருமா என்பது கேள்விக்குறி தான்.

மேற்கண்ட தகவலை பிரபல யூடியூபர் ஆலங்குடி வெள்ளைச்சாமி தெரிவித்துள்ளார்.

Published by
sankaran v

Recent Posts