வெற்றிமாறனின் காருக்கு முன் விழுந்து வாய்ப்பு கேட்ட பிரபல நடிகர்… கோபத்தில் என்ன செய்தார் தெரியுமா?
வெற்றிமாறன் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக திகழ்ந்து வருகிறார். இவர் இயக்கிய “விடுதலை” திரைப்படத்தின் முதல் பாகம் சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
தமிழ் சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்த படம்
வெற்றிமாறன் இயக்கிய முதல் திரைப்படமான “பொல்லாதவன்” மிகப் பெரிய வெற்றியடைந்தது என்பதை சினிமா ரசிகர்கள் பலரும் அறிவார்கள். அத்திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் தனுஷை வைத்து “ஆடுகளம்” திரைப்படத்தை இயக்கினார். இத்திரைப்படம் மாபெரும் பெற்றி பெற்றது மட்டுமல்லாமல் இத்திரைப்படம் 5 தேசிய விருதுகளையும் வென்றது.
இத்திரைப்படம் தமிழ் சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தது. “ஆடுகளம்” திரைப்படத்தில் முருகதாஸ் என்ற நடிகர் ஒரு முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படத்தில் அவரது நடிப்பு மிகச் சிறப்பாக இருந்தது. இத்திரைப்படத்திற்கு பிறகு அவரை ஆடுகளம் முருகதாஸ் என்றே அழைக்கத் தொடங்கினர்.
கார் முன் விழுந்த முருகதாஸ்
இந்த நிலையில் ஆடுகளம் முருகதாஸ், வெற்றிமாறனிடம் வாய்ப்பு கேட்டது குறித்த ஒரு தகவல் தற்போது வெளிவந்துள்ளது. அதாவது வெற்றிமாறன் ஒரு முறை ஒரு விழாவில் கலந்துகொண்டுவிட்டு தனது காரில் வீட்டிற்கு செல்லும்போது அவரது காரின் முன் சென்று படுத்துவிட்டாராம் முருகதாஸ். திகைத்துப்போன வெற்றிமாறன் காரை விட்டு கீழிறங்கி முருகதாஸை பார்த்து, “யோவ் என்னய்யா பண்ற? உனக்கு என்ன வேணும்?” என கேட்டதற்கு முருகதாஸ், “எனக்கு உங்க அடுத்த படத்துல வாய்ப்பு வேணும்” என கூறினாராம்.
அப்போது வெற்றிமாறனுக்கு கோபம் வந்துவிட்டதாம். “நானா கூப்புடுகிற வரை நீ என்னை வந்து பார்க்கக்கூடாது” என்று அவரை கண்டித்துவிட்டு அவரை அனுப்பிவிட்டாராம். வெற்றிமாறன் இயக்கிய “விசாரணை” திரைப்படத்தில் ஆடுகளம் முருகதாஸ் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.