பீஸ்ட் தடுமாற்றம்...! ஒட்டுமொத்த விமர்சனத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்த நடிகர் ஆரி...
கடந்த சில வாரங்களாவே ரசிகர்கள் மத்தியிலும் சரி, இணையத்தின் வாயிலாகவும் சரி, திரைவட்டாரத்திலும் சரி அடிக்கடி விவாதிக்கப்படும் விஷயம் என்னவென்றால் சமீபத்தில் வெளியாகி படு தோல்வியை சந்தித்த பீஸ்ட் படம் பற்றி தான். இயக்குனர் நெல்சனின் இயக்கத்தில் அனிருத் இசையில் வெளிவந்த் படம் எதிர்பார்த்த அளவில் ஓடவில்லை. ஆனால் வசூலில் சாதனை புரிந்த படம்.
ஏன் இந்த படத்தை பற்றி விமர்சனம் போய்க்கொண்டே இருக்கிறது என்றால் காரணம் விஜய் நடித்த படம். நடிகர் விஜய்க்கு என்று ஒரு மாஸ் இருக்கிறது, அவருக்கு என்று ஒரு ஸ்டைல் இருக்கிறது அதையெல்லாம் இந்த படம் பூர்த்தி செய்யவில்லை அதனால் தான் ரசிகர்கள் மத்தியில் ஏராளமான விமர்சனத்திற்கு தள்ளப்பட்டது.
அண்மையில் ஒரு விழாவில் நடிகர் ஆரி அவர்கள் பீஸ்ட் படத்தை பற்றி ஏன் இவ்ளோ பேச்சு? சினிமா திட்டுறவனையும் வாழ வைக்கும் பாராட்டுறவனையும் வாழ வைக்கும். அந்த சினிமாவை வைத்து தான் யூட்யூப்பில் நிறைய பேர் சம்பாதிக்கிறாங்க.அதனால் சினிமாவை பற்றி கேவலாமாக பேசாதீங்கனு கூறினார்.
இதையும் படிங்கள் : கட்டிலில் படுத்து உருண்டு கவர்ச்சி வீடியோ வெளியிட்ட கிரண்… கவர்ச்சியில் உறைந்த இணையம்!
மேலும் அவர் கூறுகையில் ஒரு படல் நல்லா இல்லைனா ஒட்டுமொத்த சினிமாவையும் விமர்சிக்கக் கூடாது. அதே போல் படம் சரியில்ல எல்லா இயக்குனர்களும் இப்படித்தான் என்று திட்டவும் கூடாது. படம் சரியில்லை என்பதை சொல்வதை விட தமிழ் சினிமா இன்னும் தரமான படங்களை கொடுக்க வேண்டும் என்ற விவாதம் தான் முன் வைக்க வேண்டுமே தவிர இருக்கிற எல்லா படங்களும் எல்லா இயக்குனர்களும் மட்டமானவர்கள் என விவாதிக்க கூடாது என தெரிவித்தார்.