தமிழ் சினிமாவில் அறிமுக திரைப்படத்திலேயே அதிக வரவேற்ப்பை பெற்ற நாயகர்களில் முக்கியமானவர் நடிகர் அப்பாஸ். இவர் 1996 ஆம் ஆண்டு வெளியான காதல் தேசம் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
காதல் தேசம் திரைப்படம் நல்ல ஹிட் கொடுத்தது. இதனால் அப்பாஸிற்கு அதிக வரவேற்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து வரிசையாக பட வாய்ப்புகளை பெற துவங்கினார் அப்பாஸ். அவர் நினைத்து பார்க்காத அளவிற்கு அதிக பட வாய்ப்புகள் அவருக்கு வந்தன. கிட்டத்தட்ட வரிசையாக ஒரு 18 திரைப்படங்களில் நடிப்பதற்கு வாய்ப்புகளை பெற்றார் அப்பாஸ்.
அந்த சமயத்தில் இதற்காக ஒரு ஹோட்டலில் ரூம் பிடித்திருந்தார் அப்பாஸ். அங்கு இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் வந்து அவருக்கு கதை சொல்லலாம். அது பிடித்திருக்கும் பட்சத்தில் அப்பாஸ் அதில் நடிக்க ஒப்புக்கொள்வார். ஆனால் அதிகப்பட்சம் வருகிற அனைத்து கதைகளையும் அப்பாஸ் நடிக்க ஒப்புக்கொண்டார்.
தவறவிட்ட இரண்டு படங்கள்:
இந்த சமயத்தில்தான் ஷங்கர் ஜீன்ஸ் திரைப்படத்தை இயக்க திட்டமிட்டிருந்தார். அப்போது நடிகர் அப்பாஸ் பிரபலமாக இருந்ததால் அவரை கதாநாயகனாக வைத்து இயக்கலாம் என அப்பாஸின் மேனஜரிடம் இதுக்குறித்து பேசினார். ஆனால் அப்பாஸிற்கு ஏற்கனவே அதிக படங்கள் நடிக்க வேண்டி இருப்பதால் இனி ஒரு புது படத்தில் கமிட் ஆக முடியாது என கூறி மேனாஜர் அந்த படத்தை தவிர்த்துவிட்டார்.
அதே போல இயக்குனர் எழில் அப்போதுதான் காதலுக்கு மரியாதை திரைப்படத்தின் கதையை எழுதி முடித்திருந்தார். அந்த கதையில் அப்பாஸை நடிக்க வைக்க நினைத்த எழில் இதுக்குறித்து பேசியுள்ளார். ஆனால் அந்த படத்திலும் அப்பாஸ் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால் இந்த இரண்டு படங்களுமே அப்போது பெரும் ஹிட் கொடுத்த படங்கள்.
அதற்கு பிறகு சில ஆண்டுகளில் வாய்ப்புகளை இழந்தார் அப்பாஸ். அவர் மட்டும் இந்த இரண்டு படங்களில் நடித்திருந்தால் ஒருவேளை இப்போது கூட அவர் பிரபலமான ஹீரோவாக இருந்திருக்க வாய்ப்புள்ளது.
Vetrivasanth: சின்னத்திரையில்…
அமரன் திரைப்படத்தின்…
அமரன் திரைப்படத்தில்…
VijayTV: தொலைக்காட்சியில்…
எழுத்தாளரும், நடிகருமான…