நடிகர் அப்பாஸ் எப்படி இருக்கிறார் தெரியுமா? - புகைப்படத்தை பாருங்கள்....
தமிழ் சினிமாவில் காதல் படங்களை இயக்கும் கதிர் இயக்கி காதல் தேசம் படத்தில் அறிமுகமானவர் நடிகர் அப்பாஸ். நல்ல உயரம், சிவப்பு நிறம், பப்ளியான முகம் என இவரை பெண் ரசிகைகளுக்கு மிகவும் பிடித்துப்போனது. எனவே, முதல் படத்திலேயே புகழின் உச்சிக்கு சென்றார்.
அதைத்தொடர்ந்து விஐபி, ஜாலி, பூவேலி, ஆனந்தம், படையப்பா, மலபார் போலீஸ், ஹே ராம், மின்னலே, குரு, திருட்டுப்பயலே என பல படங்களில் நடித்தார். ஹீரோதான் என்றில்லாமல் சின்ன சின்ன வேடங்களிலும் நடித்தார். தமிழ் சினிமா மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னட, ஹிந்தி, மலையாளம் என 60க்கும் மேற்பட்ட படங்களில் அப்பாஸ் நடித்துள்ளார். 2010ம் ஆண்டுக்கு பின் அவரை தமிழ் திரைப்படங்களில் பார்க்க முடியவில்லை. திடீரென காணாமல் போனார். ரசிகர்களும் அவரை மறந்துவிட்டனர்.
அப்பாஸ் எரும் எலி எனும் ஃபேஷன் டிசைனைரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு எமிரா எனும் மகளும் இருக்கிறார். அவருக்கு இப்போது 21 வயது ஆகிறது. இவரின் புகைப்படம் சில மாதங்களுக்கு முன்பு வெளியானது.
தற்போது மனைவி மற்றும் மகளுடன் வெளிநாட்டில் வசித்து வருகிறார் அப்பாஸ். இது தொடர்பான புகைப்படங்கள் ஏற்கனவே வெளியாகியிருந்த நிலையில், தற்போது ஒரு புதிய படம் வெளியாகி வைரலாகி வருகிறது.